26.9.05

கத்தரித் தோட்டத்து மத்தியிலே..

சென்ற முறை இலங்கை சென்ற போது வசந்தன் திரும்பத் திரும்ப சொன்ன விசயத்தினை நான் நிறைவேற்றாமல் வந்தேன். அது சில சிறுவர் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வருதல். குறிப்பாக அவர் கத்தரித்தோட்டத்து மத்தியிலே பாடலை கண்டிப்பாக ஒலிப்பதிவு செய்து வரும்படி சொல்லியிருந்தார்.

சென்ற வாரம் சிட்னி சென்ற போது எப்பிடியாவது அந்தப்பாடலை ஒலிப்பதிவு செய்ய சொல்லியிருந்தார். இம்முறை அவரது விருப்பத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நோக்கில்... இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறேன்.

இந்தப்பாடலுக்கு தனியாக இசையமைக்கப்பட்டது. சிட்னியில் எனது நண்பன் ராஜ் (தல) இதற்கான இசையை தந்திருந்தார். குரல் வழங்கியிருக்கிறார்.. அத மட்டும் சொல்ல மாட்டன்.

வசந்தனுக்கு இப்ப சந்தோசமாயிருக்கும். என்ன வசந்தன் சந்தோசம் தானே!


5 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: kulakaddan

பாட்டு வித்தியாசமா தான்ன் பாடி இருக்கிறியள். நல்ல இருக்கு. ஆனா மதி, சிறுவர் பாடல் சேகரிக்கிற ஆக்கள் என்ன சொல்லுவினமோ தெரியா

12.13 26.9.2005

3:22 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: naan

குரல் வழங்கியிருக்கிறார்.. அத மட்டும் சொல்ல மாட்டன்.

குரல் வழங்கியவர் சயந்தன்.

20.21 26.9.2005

3:23 AM  
Blogger வன்னியன் said...

பாட்டுக்கேக்குதில்ல. ஒருக்கா மின்னஞ்சலுக்கு அனுப்பி வையும்.

3:28 AM  
Blogger Sri Rangan said...

சயந்தன்,இசையும் பாடலும் நன்றாகவுள்ளது!பிச்சுப்போட்டீங்கோ.

3:12 PM  
Blogger சயந்தன் said...

நன்றி சிறிரங்கன்.. பாட்டு தான் நினைச்ச நேரங்களில தான் வேலை செய்யுது. கொஞ்சம் பொறுங்கோ.. வன்னியனின்ரை உதவியோடை அதை மீளவும் ஒருக்கா பதியிறன்.. (இன்னும் ஒரு பாட்டு இருக்கு...:))

7:47 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home