24.7.05

பனங்காய்ப் பணியாரமே..!

பனங்காய்ப் பணியாரம் தெரியுமோ? பனம்பழச்சாறெடுத்து மாவொடு பிசைந்து எண்ணையில் பொரிச்சு.. (அப்பிடிச்செய்யிறதெண்டு தான் நினைக்கிறன். )
நல்ல சுவையாக இருக்கும். யாழ்ப்பாணத்தில பனம்பழ கால சீசனில எல்லா வீடுகளிலும் இந்தப் பணியாரம் செய்வினம்.

கிட்டடியில கேட்ட ஒரு பாட்டில காதலியை பனங்காய்ப்பணியாரத்திற்கு ஒப்பிட்டிருந்தவை. பனங்காய்ப் பணியாரமே பச்சை கொழும்பு வெத்திலையே என்று!

இந்தியாவில இப்பிடியொரு பணியாரம் இருக்கா என்று தெரியவில்லை. இருந்தால் சொல்லவும்! அது இப்பிடித்தான் இருக்கும். அய்.. பனங்காய்ப் பணியாரமே..

Image hosted by Photobucket.com

பட உதவி - திரு கிளிநொச்சியிலிருந்து

14 Comments:

Anonymous Anonymous said...

அட ராசா!
பதிவு போட்டா மட்டுங்காணாதோ.
படமும் போட்டு ஏனப்பு வயித்தெரிச்சலைக் கிளப்பிறீர்?

7:40 AM  
Blogger சினேகிதி said...

Vasanthan..neenga ippa irukirira orrila intha paniyaram vanga mudiyatha?? engada vetta netru koda vangi sapidinangal

7:58 AM  
Anonymous Anonymous said...

ரொரண்டோவில் தமிழ்கடைகளில்
பனங்காய் பனியாரம் வாங்கலாம்.
பணியாரம் பட்டும் அல்ல பனம் கிழங்கு,ஒடியல் கூட வாங்கலாம்.

8:08 AM  
Blogger ஏஜண்ட் NJ said...

//இந்தியாவில இப்பிடியொரு பணியாரம் இருக்கா என்று தெரியவில்லை.//

இலங்கையில், இதன்பெயர் பணியாரமா?
எங்கள் நாட்டில் போண்டா என்ற பெயரில் இதுபோன்ற ஒரு இனிப்பான வஸ்து எல்லா ச்சாயாக்கடைகளிலும் கிடைக்கிறது.!

8:17 AM  
Anonymous Anonymous said...

நல்லாயிருக்கு.. நாக்கு ஊறுது

3:56 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: virgee

Sayanthan, unkal panaka panejaram super. Nekal sapedu iurpekal entru nenakuran. Neka sona saymuray sarejanathu than. Samajal pate tharejavidal enidam kalukal. Enidam kadal praku unkal patevukali podavum.

12.36 25.7.2005

3:43 AM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

வசந்தன் நீர் மெல்பெணில இருக்கிற தமிழ்க்கடைகள் ஒன்றுக்கும் போறல்லயா? போத்தல்ல அடைச்சு பனம்பழச்சாறு கிடைக்குது.

அதைப்பாவிச்சு பணியாரஞ் சுடுறதுக்கு செய்முறை வேணுமெண்டா தனிமடல்ல தொடர்பு கொள்ளும். என்ட ரெசிப்பிய எடுத்து விடுறன்.(பிறகு வந்து நிண்டு கொண்டு வயித்துக் குழப்பம் எண்டு சண்டைபிடிக்க/வழக்குப் போடக் கூடாது. இப்பவே சொல்லீட்டன்)..ரெசிப்பி வேணுமா? :o)

7:04 PM  
Blogger சயந்தன் said...

//வசந்தன் நீர் மெல்பெணில இருக்கிற தமிழ்க்கடைகள் ஒன்றுக்கும் போறல்லயா//

வசந்தனோ? சரி சரி நீங்க பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்றே நிக்கிறியள். (ஆனா ஒன்று வலு கெதியில இந்தப்பிரச்சைனைக்கு ஒரு முடிவு காணாமால் விடமாட்டன் :))

9:08 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

நான் உம்மைச் சொல்லல்ல சயந்தன்.

//பதிவு போட்டா மட்டுங்காணாதோ.
படமும் போட்டு ஏனப்பு வயித்தெரிச்சலைக் கிளப்பிறீர்?//


வசந்தன் அப்பிடிச் சொன்னதுக்குப் பதில் போட்டனான். நான் சும்மா இருந்தாலும் நீங்கள் விடமாட்டீங்கள் போல கிடக்கு!! :o)

10:30 PM  
Blogger Chandravathanaa said...

பதிவு போட்டா மட்டுங்காணாதோ.
படமும் போட்டு ஏனப்பு வயித்தெரிச்சலைக் கிளப்பிறீர்?

11:30 PM  
Blogger வசந்தன்(Vasanthan) said...

ஓய் ஷ்ரேயா!
நீங்கள் சொன்னதெண்டு இண்டைக்கு எனக்குத் தெரிஞ்ச 2 தமிழ்க்கடையளுக்குப் போய்ப்பாத்தன். அங்க இல்ல. வேற ஏதோவொரு கடையின்ர பேர் சொல்லீச்சினம். நகர்ப்பகுதிக்குத்தான் போக வேணும். கிடைச்சா கட்டாயம் செய்து படமெடுத்துப் போடுவன்.

11:35 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ஷ்ரேயா

நகருக்குப் போகோணுமா? எந்தக்காட்டுக்குள்ள வசிக்கிறீர்?

16.41 26.7.2005

11:45 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: NONO

சபப்பிட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டது!!!
பாக்க வாய் ஊறுகின்றது!!!!

13.16 26.7.2005

4:20 AM  
Blogger நளாயினி said...

பனங்காப் பணியாரம் மாதிரி எண்டெல்லோ சொல்லி இருக்க வேணும். கோதுமை மாவிலை போண்டா செய்து வைச்சிட்டு பனங்காப்பணியாரமெண்டு கதை விட்டது காணும். பனங்காப்பணியார வாசம் கொஞ்சமும் எனது நாசிக்கு கிட்ட வீசவே இல்லை.

11:30 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home