இந்திய அரசியலில் ஈழம் பற்றியொரு உரையாடல்
ஈழச் சூழல் பற்றி ஈழத்தவரல்லாத ஒரு தமிழருடன் விரிவாகப் பேசியதில்லை நான். (மெல்பேணில் இருந்த ஆரம்ப காலத்தில் அடுத்த அறையில் அகப்பட்ட கிழக்குத் தீமோர் நண்பர் ஒருவரோடு சற்று அதிகமாகவே கதைத்திருந்த போதும் இப்போது நினைத்துப் பார்த்தால் நான் தனியே விடுதலைப் புலிகளின் வெற்றிகளை மட்டும் அவருக்குப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறேனே தவிர ஈழப்போரின் இன்னொரு அங்கமாகிய மக்கள் பற்றி அவருக்கு எதையும் எடுத்துச் சொல்லவில்லை.(: )
வலைப்பதிவுலகில் அறிமுகமான வரவனையானுடன், அண்மையில் இந்திய சூழலில் ஈழப் பிரச்சனை பற்றி நெடுநேரம் பேசியிருந்தேன். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட அந்த உரையாடலை அவ்வப் போது வெட்டித் தொகுப்பதுவும் பின்னர்.., அது அவருக்குத் தேவையற்ற சிக்கல்களைக் கொண்டு வரலாம் என, அவற்றில் மீண்டும் வெட்டுவதுமாகத் தொடர்ந்து, எஞ்சியவற்றை வெளியிட்டு விடலாம் என்கிற நிலைக்கு இப்போதுள்ள பதிவு வந்துள்ளது.
பேச்சினூடே 95 இல் யாழ்ப்பாண இடம்பெயர்வு நடந்த போது தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்து செய்யப்பட்டது உட்பட பலதடவை சிறை சென்றதை வரவனையான் சொல்லியிருந்தார்.
ஒருவேளை இந்தியாவின் ஜனநாயகச் சூழல் இலங்கையின் ஜனநாயகச் சூழலைவிட ( அப்படியொன்று இருந்தால்) அதிகம் மேன்பட்டதாக இருக்கக் கூடும். ஆயினும் இலங்கைச் சூழலில் எவ்வாறான பேச்செல்லாம் உயிரைப் போக்கவோ, சித்திரவதையை அனுபவிக்கவோ வழிவகுக்கும் என்ற அளவு கோலில் வெட்டித் தொகுத்த இப்பதிவு வேறுபட்ட அனுபவத்தை எனக்குத் தந்தது.
வலைப்பதிவுலகில் அறிமுகமான வரவனையானுடன், அண்மையில் இந்திய சூழலில் ஈழப் பிரச்சனை பற்றி நெடுநேரம் பேசியிருந்தேன். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட அந்த உரையாடலை அவ்வப் போது வெட்டித் தொகுப்பதுவும் பின்னர்.., அது அவருக்குத் தேவையற்ற சிக்கல்களைக் கொண்டு வரலாம் என, அவற்றில் மீண்டும் வெட்டுவதுமாகத் தொடர்ந்து, எஞ்சியவற்றை வெளியிட்டு விடலாம் என்கிற நிலைக்கு இப்போதுள்ள பதிவு வந்துள்ளது.
பேச்சினூடே 95 இல் யாழ்ப்பாண இடம்பெயர்வு நடந்த போது தமிழகத்தில் இலங்கை அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கைது செய்து செய்யப்பட்டது உட்பட பலதடவை சிறை சென்றதை வரவனையான் சொல்லியிருந்தார்.
ஒருவேளை இந்தியாவின் ஜனநாயகச் சூழல் இலங்கையின் ஜனநாயகச் சூழலைவிட ( அப்படியொன்று இருந்தால்) அதிகம் மேன்பட்டதாக இருக்கக் கூடும். ஆயினும் இலங்கைச் சூழலில் எவ்வாறான பேச்செல்லாம் உயிரைப் போக்கவோ, சித்திரவதையை அனுபவிக்கவோ வழிவகுக்கும் என்ற அளவு கோலில் வெட்டித் தொகுத்த இப்பதிவு வேறுபட்ட அனுபவத்தை எனக்குத் தந்தது.
27 Comments:
சயந்தன்!, வரவனையான்!
மிக நல்லதொரு தலைப்பும், உரையாடலும் பாராட்டுக்கள். குறிப்பாக ஈழம் குறித்த கருத்துக்களுக்கு பதில்கருத்தோ, பின்னூட்டமிடுவதோ கூட சிக்கலானது எனக்கருதப்பபடும் சூழலில், வரவனையானின் முயற்சி மெச்சத்தகுந்தது. பதிவுக்கு நன்றி.
இது தான் இணையத்தின் சாத்தியம். ஆயினும் இந்தியா புலிகளுக்கு எதிராக இயங்கவில்லையென்பது விவாதத்திற்குரியது.
குறிப்பாக ஈழம் குறித்த கருத்துக்களுக்கு பதில்கருத்தோ, பின்னூட்டமிடுவதோ கூட சிக்கலானது எனக்கருதப்பபடும் சூழலில்,
agree
நல்ல கலந்துரையாடல் இன்னும் முழுமையாகப் போட்டிருக்கலாம்.
இது தான் இணையத்தின் சாத்தியம். ஆயினும் இந்தியா புலிகளுக்கு எதிராக இயங்கவில்லையென்பது விவாதத்திற்குரியது.//
இந்தியா புலிகளுக்கு எதிராகவும் ஈழ மக்களுக்கு ஆதரவாகவும் இயங்கவில்லையென்பதும் வருந்த தக்கது.
இந்தியத் தமிழரே ,
புலிகள் தான் ஈழத்தமிழர், இந்தியா ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றால் புலிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.அரசியல் யதார்த்தம் அது தான்.இன்று இந்தியா வேறு வழியில்லாமல் தான் நடுனிலையான பாத்திரம் எடுக்கிறது.உலக அரசியலில் வலிமை உள்ளவனே பூகோள அரசிலயலின் போக்கைத் தீர்மானிக்கிறான்.உபகண்ட அரசியலில் இந்தியாவின் நிலையும் அது தான்.அழித்து ஒழிக்க முடியாவிடின் அனுசரித்துப் போவதே உலக அரசியல் நடைமுறை.அரசியலில் எல்லாம் நலன் சார்ந்ததே. நிரந்தரப் பகைவர்கள் கிடையாது நிரந்தர நலன்களே உண்டு.
ஈழம் - இந்தியா குறித்து பதிவு போட்டால் பின்னூட்டப் பெட்டியில் கூட்டம் குறைவது ஏன்? ;( பின்னூட்டம் விடுபவர்களும் அடையாளம் காட்டாமல் இடுவது உறுத்தல்..இது தான் இன்றைய (இந்தியத்) தமிழனின் மனநிலையா? ;(
--
வரவணையான், சயந்தன் - வெளிநாட்டுத் திரைப்படக் காட்சி வணிகத்தில் ஈழத் தமிழர்களின் பங்களிப்பு எவ்வளவு விகிதம் இருக்கும் என்று ஏறத்தாழ சொல்ல முடியுமா? அறிய ஆவல்..
திரைப்படங்கள் அளவுக்கு விகடன் போன்ற குழுமங்கள் ஈழத் தமிழரை அனுசரித்து உள்ளதா என்பதில் எனக்கு உறுதி இல்லை. இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகவே தோன்றுகிறது. அச்சு ஊடகங்களின் முதன்மை வருமானம் அச்சு இதழ் விற்பனையே. இணையத்தில் விகடனைப் படிக்க காசு கட்ட வேண்டும் என்றாலும் அதன் முதன்மை வாசக வட்டம் தமிழ்நாட்டுத் தமிழர் மூலமே வரும். அதுவும் ஒருவர் காசு கட்டி கடவுச்சொல்லை ஊர் முழுக்க கொடுக்கும் நிலை தான் உண்டு. குமுதமும் கட்டணத் தளம் ஆகிவிட்டதா?
ஒரு நாளைக்கு 45 இலட்சம் page views தமிழ்ப் பதிவுகளுக்கு கிடைக்கிறது என்று நம்ப இயலாததாகவும் மிகையாகவும் இருக்கிறது. புள்ளி விவரம் தந்தால் நன்று.
இவ்வளவு நீண்ட பின்னூட்டத்திற்கு , அடுத்து யாராவது anony வந்து கண்டனம் தெரிவித்தால் முன்கூட்டியே பொறுமை வேண்டுகிறேன்.
ஒரு மணி நேரம் பேசி 6 நிமிடம் தான் தணிக்கைக்குப் பிறகு வருகிறதா? நாட்டு நிலைமை ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல :(
துணிவுடன் தன் பார்வையை வெளிப்படுத்திய வரவணையானுக்கு நன்றி.
அற்புதன்,
"புலிகள் தான் ஈழத்தமிழர்....."
சரியாகச் சொன்னீர்கள்!!!
சும்மா வெறும் வார்த்தைகளை வைத்து உள்குத்து குத்துவது ஒன்றுக்கும் உதவாது. வேண்டுமென்றால் கருணாநிதி (அதாங்க கலைஞர்) போல சாமர்த்தியமாக பேச உதவலாம்!
இந்த ஒலிப்பதிவில் கேட்டவற்றில் சிலவற்றிற்கான எனது எண்ணங்களை இங்கே வைக்க விரும்புகிறேன்.
//இந்திய தமிழ் ஊடகங்கள் வணிக நோக்கிற்காகவே ஈழ ஆதரவு நிலையை எடுத்திருக்கின்றன.//
வணிக நோக்கும் ஒரு காரணமாக இருக்கும். கண்டிப்பாக வணிக நோக்கு மட்டுமே காரணமில்லை. செஞ்சோலை படுகொலைக்குப் பிறகே இந்த ஆதரவு நிலை தோன்றியிருக்கிறது. செஞ்சோலை படுகொலையானது தமிழக மக்கள் மற்றும் ஊடகங்கள் தங்களுக்கு ஈழத்தில் நடக்கும் உண்மை நிலவரம் தெரிய வருவதில்லை. அனைத்து செய்திகளும் இலங்கை அரசு சொல்லும் செய்திகளே. அவை முழுவதும் உண்மையில்லை என்று நினைக்க தொடங்கினார்கள். அதனால் ஈழம் பற்றிய செய்திகளை அறிய ஆர்வம் காட்டினார்கள். இதுதான் முக்கிய காரணமாக இருக்க முடியும்.
//புலிகள் தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்கள் எதிலும் ஈடுபட்டதில்லை//
பத்மநாபா கொலை மற்றும் சில கடத்தல் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்
தமிழ் அகதிகளுக்கு சரியான வசதிகள்செய்து தரப்படவில்லை என்பதற்கு வரவணையான் சொல்லும் காரணம் அனைவரும் சொல்லக்கூடிய ஒன்று. ஆனால் தமிழ் அகதிகள் இந்தியாவுக்கு வருவதையோ அல்லது இந்திய தமிழர்களுடன் உறவு பேணுவதையோ இந்திய உளவுத்துறை விரும்பாது என்று நான் நினைக்கிறேன். அதற்கு காரணம் இந்திய மற்றும் ஈழத்தமிழர்களின் உறவு இந்திய ஒருமைப்பட்டிற்கு இடைஞ்சல் என இந்திய உளவுத்துறை நினக்கலாம்.
வெளிநாடுகளில் உள்ள ஈழ மக்களில் தமிழக ஊடகங்கள் தங்கியுள்ளன என்பது மிகையானது என்றே நானும் நினைக்கிறேன். ஈழ மக்கள் இல்லையென்றால் அவை ஒன்றும் நட்டமடைந்து விடப்போவதில்லை. லாபம் தான் பார்ப்பார்கள். ஈழ மக்கள் உள்ளமை அவர்களுக்கு மேலதிக லாபத்தைக் கொடுக்கலாம். வேண்டுமானால் மேலதிக லாபத்தைப் பெறுவதற்காக சில சமரசங்களில் அவை ஈடுபடக் கூடும். அதற்காக ஒரேயடியாக எங்களால்த் தான் அவர்கள் வாழுகிறார்கள் என சொல்ல முடியாது. அதே போல ரவிசங்கர் வெளிநாடுகளுக்கான திரைப்பட விநியோகம் பெரும்பான்மையாக ஈழத்தமிழ் நிறுவனங்களிடமே உள்ளனு
இந்தியாவுக்கு வரும் பங்களதேஸ்,நேபாளம் திபெத் காஸ்மீர் பர்மா அகதிகளை அரவணைத்து சென்று சலுகைகள் செய்யும் இந்தியா ஏன் ஈழ அகதிகளுக்கு ஏன் இந்த மாற்றான் தாய் மனப்பான்மையில் இருக்கிறது என்பதற்க்கு வரவணையான் ஓரு கருத்தும் சொல்ல வில்லை. நான் நினைக்கிறன் எனது சொந்த கருத்து மட்டுமே.. இந்திய கொள்கை வகுப்பாளர்கள் ஈழஅகதிகளை விந்தியமலைக்கு தென்பகுதி உள்ளவர்களின் உறவினராய் இப்பவும் பார்ப்பது தான் காரணம் அந்த கட்டையான கறுப்பான விசுவாசிகளை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்
நாளும் நீங்கள் மாற்றும் ஈழம் தொடர்புடைய தலைப்புப் படங்களைக் கூடத் தனிப்பக்கத்தில், முடிந்தால் குறிப்புகளுடன், தொகுத்து தரலாம். A9 படமும் (செய்தியும்?) நன்று.
அருமையான உரையாடல். வரவனையானுடைய கருத்துகளிலிருந்து நிறைய தகவல்களை அறிய முடிந்தது.
//ஒரு மணி நேரம் பேசி 6 நிமிடம் தான் தணிக்கைக்குப் பிறகு வருகிறதா? நாட்டு நிலைமை ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல :(//
ரவிசங்கர் உரையாடலில் அன்றைய ரஜீவ் கொலை முதல் அண்மைக்கால அலுமினியக் கடத்தல் அல்லது கடத்தல் நாடகங்கள் வரை பேசியிருந்த போதும் எனது தயக்கத்தினாலேயே அவற்றை வெளியிட வில்லை. மற்றும் படி இந்தியாவில் அவ்வளவு இறுக்கமான மறுப்புச் சூழல் இருக்கிறதா என எனக்குத் தெரியாது.
நல்லதொரு உரையாடல்..ஏன் இடையில் நின்றுவிட்டது??
//அதே போல ரவிசங்கர் வெளிநாடுகளுக்கான திரைப்பட விநியோகம் பெரும்பான்மையாக ஈழத்தமிழ் நிறுவனங்களிடமே உள்ளனு
//
இன்று மிக பெரிய பெனர்களிடம் படத்தை வாங்குவதற்க்கு தான் போட்டி. இதில் விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களை அனுசரித்தால் தான் உங்களுக்கு படம் கொடூப்போம் என்று புரொடக்ஷ்ன் ஹ்வுஸ் சொல்லும் அளவில் தான் தமிழ் சினிமா உள்ளது.
வரவனையான் அவர்கள் கிரடிட் கார்டு ஃபிராடும் கறுப்பர்களுக்கு ஈடாக ரவுடித்தனம் செய்தும் எடுபிடி வேலைகளில் பிழைப்பு நடத்தும் நாடு இல்லா வெளிநாட்டு வாழ் தமிழரை இத்தனை தூரம் மிகைபடுத்தி பேசியபோது உங்களுக்கு நிச்சயம் சிரிப்பு வந்திருக்க வேண்டும்.
உங்களை அழைத்து பயிற்சியும் அளித்து சகல வசதியும் அளித்த நாடு இந்தியா. இந்திராகாந்தி செய்த உதவிகளை எழுத்தில் கூற முடியாது.
ராஜீவின் அரசியல் முடிவு தவறு என்றால் அவரைக் கொல்வது நியாயமான
முடிவா? புலிகள் சகோதர அமைப்புக்களான ரெலோ, தமிழர்கூட்டணித் தலைவர்களைக் கொன்றார்கள். இப்பொழுது அவர்களுடன் புலிகள் கூட்டணி வைத்து அரசியல் நடத்தவில்லையா? ராஜிவ் தவறு செய்த்தாக நீங்கள் நினைத்திருந்தால் ரெலோ அமைப்புடன் காட்டிய பொறுமையை ஏன் இந்தியாவுடன் காட்டாமல் கொலையில் இறங்கினீர்கள்?
ராஜிவ் தவறுக்காக அவரை நீங்கள் தண்டித்தது சரி என்றால், ராஜீவ் காந்தியைக் கொலை செய்த்தற்காக ஏன் இந்தியா உங்களைத் தண்டிக்கக்கூடாது?
பி.கு: சின்னக்குட்டி, செல்வி, செல்லி போன்ற அரைவேக்காடுகள் பதில் சொல்வதைத் தவிர்த்தால் நன்று.
//கிரடிட் கார்டு ஃபிராடும் கறுப்பர்களுக்கு ஈடாக ரவுடித்தனம் செய்தும் எடுபிடி வேலைகளில் பிழைப்பு நடத்தும் நாடு இல்லா வெளிநாட்டு வாழ் தமிழரை//
யா.. யா.. ஒரு சிலரை வைத்து ஒரு இனத்தின் மீது இப்படி முத்திரை குத்த முடியுமென்றால்..
பொலீஸ் நிலையத்தில் நீதி கேட்டு வரும் பெண்டிரை பாலியல் பலாத்காரம் செய்யும் காட்டுமிராண்டிகள் உள்ள நாடு..
லஞ்சமும் ஊழலும் சகல கூறுகளிலும் தலைவிரித்து ஆடும் நாடு..
ஆங்கில மோக அடிமை மனப்பான்மை விட்டகலாத தமிழ் பேசும் போது அரைவாசிக்கும் மேல் ஆங்கிலம் கலந்து இரு மொழிகளையும் கொலை செய்யும் ஆட்கள் உள்ள நாடு
சொந்த நாட்டு மீனவனை பக்கத்து நாட்டுக்காரன் சுட்டுவிட்டுப் போன பிறகும் சும்மா பார்த்துக் கொண்டிருக்கும் ரோசமற்ற அரசியல் வாதிகள் உள்ள நாடு..
இந்தியா என நான் எழுத எவ்வளவு நேரம் ஆகும். வெறும் 5 நிமிடமே போதும்.
ஈழத்தின் தமிழன் பிள்ளைகள் அடிமைப் படுத்திய ஆங்கிலேயன் மொழி மட்டுமல்ல உலக மொழியனைத்தும் அறிந்து கொண்டுள்ளார்கள். விமானத் தொழில் நுட்பம் முதல் வீடியோ தொழில் நுட்பம் வரை கொடிகட்டிப் பறக்கிறார்கள். இன்னும் காலமிருக்கிறது எடுபிடி வேலை செய்தவரின் பிள்ளைகள் இன்னும் இன்னும் பிரகாசிக்க..
ஈழம் கிடைக்கட்டும். ராமேஸ்வரத்திற்கு 30 கிலோமீற்றர் தொலைவில் ஒரு சிங்கப்பூர் உருவாகும்.
அனானி! இலங்கையில் சுட்டுக் கொல்லப்படும் தமிழர்களில் எத்தனை பேர் இலங்கை இராணுவத்தால் இறக்கின்றார்கள்? தமிழனை தமிழன் கொல்லப்படும் நாடு எங்கள் மண். இந்தியத் தமிழனைக் கள்ளத்தோணி என
அழைத்துவிட்டு இந்தியாவிற்குள் படகில் செல்லும் தமிழர்களை எப்படி அழைப்பது? எங்கள் ஈழத் தமிழர்களின் தில்லுமுள்ளு, ஆட்கடத்தல், மோசடிக்கு யார் பொறுப்பு?
புலம்பெயர் நாடுகளில் எங்கள் ஈழத் தமிழ் குடும்பத்திற்குள் நடைபெறும்
கொலைகள், மோசடிகள், அசிங்கமான உறவுகளை எப்படி அழைப்பது?
இந்தியக் கற்பளிப்பை நாங்கள் பேசுவதற்கு முன்னர் புலம்பெயர் மண்ணில்
எஙகள் ஈழத்தமிழ் மக்களின் யோக்கிதை சாக்கடையில் உள்ளது என்பதை
மறக்கக்கூடாது.
ஊரில் உள்ள ஈழத் தமிழர்களில் 90 % ஆங்கிலம் தெரியாது. கனடாவிலும்,
லண்டனிலும் உள்ள தமிழர்கள் எத்தனை பேர் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசுகின்றார்கள்?
ஒரு ஈழத் தமிழன்.
அனானி! இலங்கையில் சுட்டுக் கொல்லப்படும் தமிழர்களில் எத்தனை பேர் இலங்கை இராணுவத்தால் இறக்கின்றார்கள்? தமிழனை தமிழன் கொல்லப்படும் நாடு எங்கள் மண். இந்தியத் தமிழனைக் கள்ளத்தோணி என
அழைத்துவிட்டு இந்தியாவிற்குள் படகில் செல்லும் தமிழர்களை எப்படி அழைப்பது? எங்கள் ஈழத் தமிழர்களின் தில்லுமுள்ளு, ஆட்கடத்தல், மோசடிக்கு யார் பொறுப்பு?
புலம்பெயர் நாடுகளில் எங்கள் ஈழத் தமிழ் குடும்பத்திற்குள் நடைபெறும்
கொலைகள், மோசடிகள், அசிங்கமான உறவுகளை எப்படி அழைப்பது?
இந்தியக் கற்பளிப்பை நாங்கள் பேசுவதற்கு முன்னர் புலம்பெயர் மண்ணில்
எஙகள் ஈழத்தமிழ் மக்களின் யோக்கிதை சாக்கடையில் உள்ளது என்பதை
மறக்கக்கூடாது.
ஊரில் உள்ள ஈழத் தமிழர்களில் 90 % ஆங்கிலம் தெரியாது. கனடாவிலும்,
லண்டனிலும் உள்ள தமிழர்கள் எத்தனை பேர் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசுகின்றார்கள்?
ஒரு ஈழத் தமிழன்.
//இந்தியா என நான் எழுத எவ்வளவு நேரம் ஆகும். வெறும் 5 நிமிடமே போதும். ///
தாராளமாக எழுதுங்கள்.யாரு தடுத்தது???
//விமானத் தொழில் நுட்பம் முதல் வீடியோ தொழில் நுட்பம் வரை கொடிகட்டிப் பறக்கிறார்கள்//
அமெரிக்காவில் சோளப்பயிருக்கு மருந்தடிக்கும் விமானங்களை போன்று இரண்டு விமானங்களை வைத்துக்கொண்டு இத்தனை பெருமையா??
தமிழக அனானி நண்பரே!
"அமெரிக்காவில் சோளப்பயிருக்கு மருந்தடிக்கும் விமானங்களை போன்று இரண்டு விமானங்களை வைத்துக்கொண்டு இத்தனை பெருமையா?? "
சோளக் கொல்லைக்கு அமெரிக்காவில் பயன்படுத்தும் விமானமாக இருந்தால் என்ன? தமிழன் வரலாற்றில் மட்டுமல்ல உலக விடுதலை வரலாற்றில் புலிகளின் தாக்குதல் மிக முக்கியமானது. இல்லாவிடின் ஏன் இந்தியா தனது எல்லையில் அவசரமாக ராடர்களை அனுப்பவேண்டும்?
இந்தியத் தமிழர்களை யாரும் தாக்குவதை நான் ஒருபோதும் ரசிப்பது இல்லை. அதானால் தான் இந்தியா சார்பான கருத்துக்களை எழுதினேன்.
இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் இரு விழிகள்.
ஒருவரை ஒருவர் தாக்குவது மிகத் தரக்குரைவான செயல்.
அன்பாக இருக்கவேண்டும்>
ஒரு ஈழத் தமிழன்
அமெரிக்காவில் சோளப்பயிருக்கு மருந்தடிக்கும் விமானங்களை போன்று இரண்டு விமானங்களை வைத்துக்கொண்டு இத்தனை பெருமையா??
ரஜீவ் கொலை என்பது அவ்வப்போது பருவகால றிலே ஓட்டம் போல இணையத்தில் சுற்றிச் சுற்றி வரும். முன்பு ஓடிய அதே முகங்கள் அதே மைதானம் அதே கம்பு.. ஒரு கேள்வியிலிருந்து புறப்பட்டு ஒரு சுற்றுச் சுற்றி மீண்டும் ஆரம்பித்திற்கு வரும் இந்த விளையாட்டை கடந்த பத்து வருடங்களாக கண்டு கழித்து வருவதனால் புதிதாக வேறு ஏதும் பின்னூட்ட முடியுமா..?
//அமெரிக்காவில் சோளப்பயிருக்கு மருந்தடிக்கும் விமானங்களை போன்று இரண்டு விமானங்களை வைத்துக்கொண்டு இத்தனை பெருமையா??//
குண்டு போடும் விமானங்களைப் பயன்படுத்தியே அமெரிக்காவில் சோளப் பயிருக்கு மருந்தடிக்கிறார்கள் என்பது எனக்குப் புதிய செய்தி. என்ன இருந்தாலும் அமெரிக்கா ரொம்பப் பெரிய வல்லரசு தான்.. ஆமா.. அமெரிக்காவில் பொதுப் போக்குவரவுக்குக் கூட கவச வாகனங்களைத் தான் பயன்படுத்துகிறார்களா..? anyway thanks for your new info
பாமரன்,
அமெரிக்கா மற்றும் இன்ன பிற வளர்ந்த நாடுகளில் crop duster என்று அழைக்கப்படும் விமானங்களை போன்ற இரு/பல விமானங்கள் தாம் புலிகளிடம் இருக்கின்றன.
புலிகளை போன்ற ஒரு இயக்கத்திற்க்கு இந்த மாதிரி வான்படை பிரிவை அமைப்பதே மிக பெரிய 'சாதனை' என்று சொல்வது சரி.
இதனால் உலகிலேயே விமான தொழில்நுட்பத்தில் தமிழன் கொடிகட்டி பறக்கிறான் போன்ற சொல்லாடல்களை கையாள்வது மிகவும் சிறுபிள்ளைதனமாக உனரப்படும் என்ற உன்மையை புரிந்துகொள்ளுங்கள்.
நான் இந்தியாவில் இருந்த போது தெரியாத ஈழ தெசத்து தமிழனின் கஷ்டங்கள் எல்லாம் இங்கிலாந்து வந்த பின்னர் தெரிகிறது......ஈழ தமிழன் செய்யும் ஃபிராடு வேலைகளால் ஏற்படும் அவமானத்தையும் தனி நாட்டு கோரிக்கைக்கு இதனால் ஏற்படும் பாதிப்பை சேர்த்தே சொல்கிறேன்.
ஒரு நாட்டில் மரியாதையாக இருக்க முடியாத மக்களுக்கு எப்படி ஆந்த ஊர் மக்கள் ஆதரவளிக்க முன்வருவார்கள்.
இன்றுவரை வாலாஜா நகரில் இருக்கும் ஈழ அகதிகள் எத்தனை கிரிமினல் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்!!! உள்ளூரில் ரவுடி ராஜ்ஜியம் அமைத்து நல்லென்னத்தை இழக்காதீர்கள்.
இன்றைய நிலையில் தமிழனுக்கு உலக அளவில் அனுதாபம் தேடும் வேலை தான் முக்கியம்....அதைவிட்டு இந்திய தமிழ் சினிமா ஈழ தமிழனை நம்பியிருக்கிறது, விமான தொழில்நுட்பத்தில் கொடிகட்டி பறக்கிறோம் போன்ற வடிகட்டிய பொய்களை பரப்புவது பத்து பைசாவுக்கு உதவாது.
அப்பனுக்கே கோமன் இல்லையாம் இழுத்து கட்டுடா பேராண்டி என்றானாம்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home