8.4.07

வரவனையான்- சோமி - சயந்தன், வலையுரையாடல்

வலைப் பதிவுலகில் பின்னூட்டமிடும் வசதியென்பது வேறெந்த ஊடகத்திற்கும் கிடைத்திராத பெரும் வாய்ப்புக்களில் ஒன்று. பதிவாளர் முடித்த பதிவு, அதனை வாசிப்பவரிடத்தில் ஆரம்பிக்கும் அவரது சிந்தனையின் தொடர்ச்சியை, தொடர்ந்தும் இறுதி வரை கொண்டு செல்ல உதவும் பின்னூட்ட வசதிகள் சரியான முறையில் தமிழ் வலைப்பதிவுச் சூழலில் பயன்படுத்தப் படுகிறதா..?

பெரும்பாலும் பாராட்டுக்களாகவும் வாழ்த்துக்களாகவும் அல்லது வசைவுகளாகவும் அமைகின்ற பின்னூட்டங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் படுகின்றது..?

ஒருவருடைய எண்ணப் பதிவுகளை வெளியிட, இன்னுமொருவருடைய அனுமதியை வேண்டி நிற்கும் ஊடகச் சூழலில், பெரும் கட்டுடைப்பாக அவரவர்கள் தமது மனப்பதிவுகளை சுதந்திரமாகவும், திறந்த நிலையிலும் வெளியிடும் வாய்ப்பினை வலைப் பதிவு தந்திருக்கிறது. இந்நிலையில் எழுதப் படும் பதிவுகள் ஒருவருடைய மன வெளிப்பாட்டின் பதிவுகளாக அமைவது தவிர்க்க முடியாததாகிற போது, அவை கண்டிப்பாக ஏதாவது மாற்றத்திற்கான, அல்லது வாசகரை ஏதோவொரு விதத்தில் ஒழுங்கமைக்கும் படியாக அமைவது கடைப் பிடிக்கப் படக் கூடியதா..?

இவைபற்றிய கலைந்துரையாடல் இது.



குறிப்பு: இக் கலந்துரையாடலில் சயந்தன், சோமி, வரவனையான் தவிர வேறு சிலரும் குரல் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி ..(அப்பாடா முதல் நன்றி எங்களுடையது.)

29 Comments:

Blogger சினேகிதி said...

நான் கட்டாயம் வாங்கோ மற்றும் நன்றி சொல்றதை நிப்பாட்டவே மாட்டன்.

5:13 PM  
Blogger சயந்தன் said...

//நான் கட்டாயம் வாங்கோ மற்றும் நன்றி சொல்றதை நிப்பாட்டவே மாட்டன்.//
உங்கள் பிடிவாதத்திற்கு நன்றி

2:06 AM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

11 நிமிட ஒலிப்பதிவுக்கு 4 நிமிட முன்னோட்டமா? 2 மணி நேர படம் எடுத்தால் 50 நிமிடம் முன்னோட்டம் விடுவீர்களா ;)? இல்லை, இந்த ஒலிப்பத்தி இன்னும் தொடர இருக்கிறதா? கடைசியில் துணுக்கு உரையாடல் வந்ததால் சந்தேகம்? தவிர, முன்னோட்டத்தில் வந்த export quality girls குறிப்பை ஒலிப்பத்தியில் காணவில்லையே ;)

--
வலைப்பதிவு ஒருவரின் தனிப்பட்ட பதிவாக இருப்பதில் ஒரு தவறும் இல்லை. அதில் பயன் இருக்க வேண்டும் என்றும் அவசியம் இல்லை. இந்த வகையில் குகை ஓவியங்களை ஒப்பிட்டு வரவணையான் சொன்னது முக்கியமான, நல்ல நோக்கு. விலங்குகளையும் வீட்டுப் பொருட்களையும் அக்கால மனிதன் அக்காலத்தில் எழுதியது அப்போது மொக்கை. ஆனால், இப்போது ஒரு வரலாற்றுக் குறிப்பு. அது போல் இன்னும் சில ஆண்டுகள் கழித்து முன்னோக்கி வலைப்பதிவுகளை நோக்கிப் பார்த்தால் அவற்றில் சமூக நிகழ்வுகள், மொழி வழக்குகள், உரை நடைகள் என்று பல விதமான தணிக்கை செய்யப்படாத போக்குகள், குறிப்புகளைக் காணலாம். அந்த வகையில் எவ்வளவு மொக்கையான பதிவாக இருந்தாலும் அவை ஒரு சமூக ஆய்வுக்கு உதவுபவையாக இருக்கும். 50 ஆண்டுக்கு முன்னர் வந்த சுவரொட்டிகள் கூட சமூக ஆய்வுக்கு உதவுவது குறிப்பிடத்தக்கது.

ஆனால், திரட்டி மூலமாக ஆட்களை இழுத்து வர வேண்டும் என்று ஏதாச்சும் ஒன்றை எழுதிக் கொண்டிருப்பது தான் ஆராக்கியமான சூழல் இல்லை. ஏமாற்று வேலையாக இருக்கிறது.

-இன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரில. அதனால் இந்த படம் போட்டுக்கிறேன்

(பதிவது என்ன insulin ஊசி போடுவது போலவா? ஒன்னும் எழுத இல்லாட்டி எழுதாமல் இருக்க வேண்டியது தானே? எதற்கு இப்படி ஒரு அறிவிப்பு? இருக்கிறேன் என்று காலை ஆட்டிக் கொண்டே இராவிட்டால் பதிவரை எல்லாரும் மறந்து விடுவார்கள் என்று பயமா?)

- D**duனு எழுதினா எத்தனை பேர் வர்றாங்க, hit counter எப்படி எகிறுதுன்னு பார்க்கிறேங்கிறேன் -

(இதில் என்ன அனுபவப் பதிவு? குரங்காட்ட வேலையாகத், தோரணம் கட்டுவதாகத் தான் தெரிகிறது)

--
எதிர்ப்பார்த்ததை விட பயனுள்ளதாக இருந்தது உரையாடல். அடுத்த பாகத்தை எதிர்ப்பார்க்கிறேன். இனி என் பதிவில் நன்றி, வருக பின்னூட்டங்களைத் தவிர்க்கப் போகிறேன்.

2:36 AM  
Anonymous Anonymous said...

ரவிசங்கர் எதற்காக இவ்வளவு பெரிய மறுமொழி இடுகிறார்.. வந்தமா பதிவுக்கு நன்றி என்று சொன்னமா என்று இல்லாமல்.. இவர் தவறான முன்னுதாரணமாக இருக்க முயற்சிக்கிறாப்பல இருக்கிறது.

அப்புறம் பதிவுக்கு நன்றி.. இனித்தான் கேட்க வேண்டும்.

3:07 AM  
Blogger வரவனையான் said...

மொக்கை பதிவர் விடுதலை அமைப்பின் அமெரிக்காவுக்கான பின்னூட்ட கட்டளை அதிகாரி யாக ரவிசங்கர் இன்று முதல் இயங்குவார் என மத்திய குழுவின் அவசரகூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது .

- தலைமையின் சார்பாக
வரவனையான்

3:20 AM  
Blogger சின்னக்குட்டி said...

வணக்கம் விமர்சன பிரம்மாக்களே... பதிவு என்பது விருப்பமானதை தனக்கு தெரிந்தததை இயலுமானதை எழுத கூடியதாக இருக்கிறது என்று சொல்லுகிறீர்கள். அதுக்கு ஆதிகால குகை ஓவியத்தை கூட சாட்சிக்கு கூப்பிடுறயள். உங்கள் பதிவை அலங்கரிக்கிறதுக்கு உங்கள் துறை சார் வித்தகத்தை பயன்படுத்தி என்னனென்ன கோலம் போடுகீறீர்கள்... இது போல தனது இயலமைக்குட்பட்டு தனது கிறுக்கலை தனது தெரிந்ததை பலர் பார்க்க வேண்டும் ஆவலானால் ஒரு சிலர் மரபு ஆக்கியுள்ளார்கள் .ஒருவர் ஒருவது பதிவுக்கு வெறுமனே பார்த்து விட்டு போகமால் அதற்க்கு மதிப்பளித்து நாலு வார்த்தை எழுதினால். அதற்கு பதில் அளித்து எட்டு வார்த்தை எழுதாவிட்டாலும் இரண்டு வார்த்தை எழுதுவுதால் பதிவுலுக வளர்ச்சிக்கு ஒன்றும் கெட்டு போகாது. எதிலும் தூய்மையும் முழுமைத்தனம் இருக்கவேண்டும் நினைப்பது ஆரோக்கியமான விடயமல்ல.ஒலி உரையாடல் விமர்சன பிரம்மாக்களே உங்கட அளவு கோலால் எல்லாவற்றைய அளக்க முற்படாதையுங்கோ.. சிறிது காலத்திற்க்கு முன்பு வசந்தனும் சயந்தனும் சந்திரவதனாவும் ஈழநாதனும் மற்றும் வெறு சிலரே ஈழ பதிவர்கள் இருந்தனர். இன்று பலர் எழுதுகிறார்கள். பின்னூட்டம் விவாத பரப்பை நீடிப்பதோடு பதிவர்களுக்கு ஊக்குவிப்பையும் செய்கிறது. பதிவால் மாற்றங்களை உருவாக்கேலாது சொல்றியள்.பிறகேன் நீங்களேன் அழுகிறீர்கள். உங்கள் ஊடகத்துறையிலேயே தலைப்பை எப்படி கவர்ச்சியாய் எப்படி போடுவேண்மன்று சொல்லி கொடுக்கிறான்கள் தானே.

நான் தொடர்ந்தும் எனது பதிவுக்கு வருபவரை மதித்து வருகைக்கும் நன்றியும் சொல்வேன் என்று மீண்டும் கர்ச்சித்து சொல்கிறேன்

3:24 AM  
Blogger சயந்தன் said...

//இனி என் பதிவில் நன்றி, வருக பின்னூட்டங்களைத் தவிர்க்கப் போகிறேன்.//

ரவிசங்கர் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி. சின்னக்குட்டியாருக்கு சொல்ல வேண்டிய நன்றியை ஒரு பத்து அல்லது இருபது நிமிடம் கழித்துச் சொல்கிறேன். ;)

3:39 AM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இராவணன் பேரனுக்கு என் கண்டனங்கள் ;)

வரவணையான் - நான் இருப்பது நெதர்லாந்தில். அமெரிக்காவில் இல்லை. நெதர்லாந்துக்கு ஏதேனும் பொறுப்பு இருந்தால் தருமாறு வேண்டிக் கொள்கிறேன் ;)

3:44 AM  
Anonymous Anonymous said...

ரவிசங்கர் நீங்கள் இருப்பது ஐரோப்பா ஆயினும் உங்களுக்கு அமெரிக்காவிற்கான பின்னூட்டக் கட்டுப்பாட்டுக் கட்டளை அதிகாரி என்னும் பதவியே பொருத்தமானதாயிருக்கும் என தீர்மானித்துள்ளோம். சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படுமாறு அன்பாக எச்சரிக்கிறோம்.

3:53 AM  
Blogger மலைநாடான் said...

சினிமா எனும் சிறப்பான ஊடகத்தை சீரழித்துவிட்டார்கள் எனக் கூச்சலிடும் புத்திஜீவிகள், தாம் வலம் வரும், இணையம் எனும் அற்புதமான ஊடகத்தை ஆரோக்கியம் குறித்து அக்கறைப்படத்தேவையில்லை என்பது எவ்வகையில் நியாயம் என்பது புரியவில்லை. நீங்கள் செய்வது சரியானதென்றால், தமிழ்சினிமாவையோ அல்லது அதற்கப்பாலோ உங்களால் வைக்கப்படும் விமர்சனங்கள் எவ்வகையில் சரியானது?

4:04 AM  
Blogger அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மத்திய கமிட்டி முடிவுக்கு உடன்படுகிறேன் ;)

4:23 AM  
Blogger சின்னக்குட்டி said...

//இணையம் எனும் அற்புதமான ஊடகத்தை ஆரோக்கியம் குறித்து அக்கறைப்படத்தேவையில்லை என்பது எவ்வகையில் நியாயம்//

மலைநாடர்.. சினிமா ஊடகம் இணைய ஊடகம் பதிவு பதிவர் சொல்லாடல்களுக்குள் சிக்கி தவிப்பதாக தெரிகிறது. இணைய ஊடகம் என்ற பெரிய பரப்பில் பதிவர் சிறிய பரப்பில் காய்ச்சல் தடிமன் பார்க்கமால் ஒரு சுதந்திர தன்மை இருப்பதால் கந்தனும் சுப்பனும் சின்னக்குட்டியும் தப்பி எழுத கூடியதாயிருக்கு என்றை சொல்லலாம் . அவர்களால் எந்த ஆரோக்கியமின்மை வராது ஏன்என்றால் அது அவர்கள அவர்களுடைய டைரி பினாத்தல்கள். சினிமா முழுமையான மக்கள் சார்ந்த ஊடகம். பதிவர் என்பது தனிமனிதர் சார்ந்த விடயம்.. பகுதிக்குள் முழுமையை அடைக்க இயலாது.

4:24 AM  
Blogger மலைநாடான் said...

//சினிமா முழுமையான மக்கள் சார்ந்த ஊடகம். பதிவர் என்பது தனிமனிதர் சார்ந்த விடயம்//

அது சரி சின்னக்குட்டி. ஆனால் அந்த வாய்பினை தவறாகப்பயன்படுத்தி, ஊடாடும் வலைப்பதிவுலகமும், மக்கள் சார்ந்த ஒருபொது ஊடகம்தானே

4:51 AM  
Blogger சயந்தன் said...

சின்னக் குட்டியின் முதலாவது வருகைக்கு நன்றி. இரண்டாவது வருகைக்குப் பின்னர் நன்றி சொல்லப்படும்.

வலைப்பதிவின் ஆரம்ப காலங்களில் அது ஒரு டைரிக் குறிப்பே என பரவலாக சொல்லப் பட்டது. அதை நம்பி வந்த ஆயிரக் கணக்கானோரில் நானும் ஒருவன். :(

4:57 AM  
Blogger சின்னக்குட்டி said...

//ஆனால் அந்த வாய்பினை தவறாகப்பயன்படுத்தி, ஊடாடும் வலைப்பதிவுலகமும், மக்கள் சார்ந்த ஒருபொது ஊடகம்தானே//

திரும்ப திரும்ப கவுண்டமணி செந்தில் வாழைப்பழ கதை மாதிரி சொல்ல விரும்பவில்லை.பதிவு தனிமனித எழுத்து சுதந்திரத்துக்கு அற்புதமான கொடை. இதில் தமிழ் பதிவுகளே மக்கள் மக்கத்தியில் ஜனரசங்கபடுத்த முன்னரே நதி முலமும் ரிசி மூலமும் பார்ப்பதை தான் பிழை என்று சொல்றன்..சினிமா அப்படி அல்ல மக்களிடையே நல்ல தெரிந்த பழக்கப்பட்டஊடகமாக இருக்கிறது

5:04 AM  
Blogger அற்புதன் said...

சின்னக்குட்டியின் கருத்தே எனதும்.
ஒரு இடத்தில் இடுகைகள் பதிவரின் ஒரு பகுதி என்று விட்டு(குகை ஓவியம்) இன்னொரு இடத்தில் நன்றி தெருவிப்பது பிழை என்பதாக விமர்சனம்.அந்தப் பதிவருக்கு நன்றி தெருவிப்பது ஒரு பண்பாட்டு விசயமாக இருக்குமிடத்து , ஒரு வரியில் நன்றி தெருவிப்பது அவரின் தனிப்பட்ட விருப்பு.அதனை விமர்சிப்பதன் மூலம் நீங்கள் சொல்ல வரும் செய்தி என்ன? உங்களுக்கே முரணாக இல்லை.ஒரு இடத்தில் வலைப்பதிவுகள் செய்திகள் சொல்லக் கூடாது என்கிறீர்கள் இன்னொரு இடத்தில் நீங்களே பரிந்துரைகள் செய்கிறீர்கள்.

5:51 AM  
Blogger மலைநாடான் said...

சின்னக்குட்டி!
நானும் நீங்களும் தவறான புரிதல்களுடன் வாதிடுகின்றோம் என்று கருதுகின்றேன். ஆகவே முடியுமாயின் உங்களோடு நேரடியாகப் பேசுபோது என் கருத்துக்களைத் தெளிவு படுத்துகின்றேன்.

அற்புதன்!

//ஒரு இடத்தில் இடுகைகள் பதிவரின் ஒரு பகுதி என்று விட்டு(குகை ஓவியம்) இன்னொரு இடத்தில் நன்றி தெருவிப்பது பிழை என்பதாக விமர்சனம்.//
இந்த முரண் குறித்தே சொல்ல வந்தேன். ஆனால் அது திசை திரும்பி விட்டது.

6:13 AM  
Blogger கொழுவி said...

அற்புதன் said...
//சின்னக்குட்டியின் கருத்தே எனதும்.//



அற்புதன்,
என்ன இது?
இந்தப்பிரச்சினையைத் தொடக்கிவைச்சதே நீங்கள்தானே?
ஒருத்தனும் பிரியோசினமா எழுதிறேல, துறைசார்ந்த பதிவுகள் எழுதிறேல, சும்மா அலட்டிக்கொண்டிருக்கிறாங்கள் எண்டமாதிரி சொன்னியள்.
இஞ்ச சின்னக்குட்டி சொன்னது உங்கட கருத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆனால் இந்தப்பதிவில கூட்டணி சேந்திட்டியள்.
(அரசியலில இதெல்லாம் சகஜம் எண்டு சொல்லிப்போடாதைங்கோ ;-)
_________________
சின்னக்குட்டியும் மலைநாடானும் இஞ்சயே கொழுவுப்படுறதுதானே? பிறகென்ன, நேரில கதைப்பமெண்டு நழுவுறியள்? அப்ப நாங்களெல்லாம் அணிலேறவிட்ட நாயள் மாதிரி பாத்துக்கொண்டிருக்கிறதோ?

இப்ப அற்புதனையும் இழுத்துவிட்டாச்சு. மூண்டுபேரும் ஒரு சமா வையுங்கோ. அப்பப்பா நாங்கள் வந்து தண்ணிஊத்திவிடுறம். (நாயள் சண்டைபிடிக்கேக்க 'தண்ணி ஊத்திவிடுற' சம்பவத்தை இஞ்ச ஞாபகப்படுத்திப் போடாதைங்கோ. நான் அதைச்சொல்லேல. ;-)

6:31 AM  
Blogger மலைநாடான் said...

//சின்னக்குட்டியும் மலைநாடானும் இஞ்சயே கொழுவுப்படுறதுதானே? பிறகென்ன, நேரில கதைப்பமெண்டு நழுவுறியள்? அப்ப நாங்களெல்லாம் அணிலேறவிட்ட நாயள் மாதிரி பாத்துக்கொண்டிருக்கிறதோ?

இப்ப அற்புதனையும் இழுத்துவிட்டாச்சு. மூண்டுபேரும் ஒரு சமா வையுங்கோ. அப்பப்பா நாங்கள் வந்து தண்ணிஊத்திவிடுறம். (நாயள் சண்டைபிடிக்கேக்க 'தண்ணி ஊத்திவிடுற' சம்பவத்தை இஞ்ச ஞாபகப்படுத்திப் போடாதைங்கோ. நான் அதைச்சொல்லேல. ;-) //


கொழுவி!
தெருச்சண்டை கண்ணுக்குக் குளிர்ச்சி என்று ஊரில சொல்லுறவை.:))
ஆனால் தெருச்சண்டைக்கு நான் தயார் இல்லை.:)))))) அதுதான் என் கருத்துக்களுடன் முரண்படும் சின்னக்குட்டியுடன் நேரில் பேச முடியும்போது பேசிக்கொள்கின்றேன் என்றேன். உங்களுக்குக் களங்கள் தேவைப்படுமாயின் அதற்கு வேறு இடங்கள் உண்டுதானே...:)))

6:44 AM  
Blogger சயந்தன் said...

ஆகவே அற்புதன் அவர்களே.. பதிவுகள் பதிவர் ஒருவரின் ஏதாவது ஒரு எண்ண வெளிப்பாடாக இருக்கலாம் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா..? சின்னக் குட்டி சொன்னது போல அவை கண்டிப்பாக முழுமையானதாகவும் தூய்மையானதுமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையா..? நன்றிப் பின்னூட்டம் ஒருவரின் தனி விருப்பு எனில் பதிவுகள் ஏன் தனி விருப்பாக இருக்கக் முடியாது. ?
அப்புறம் சின்னக் குட்டியின் இரண்டாவது வருகைக்கு நன்றி.

ஓகே.. பாயாசம் செய்வது எப்படி என்ற பழைய ஒலிப்பதிவை ஒலிபரப்புவதற்குரிய புறச் சூழலை ஏற்படுத்தியாகி விட்டது.

7:05 AM  
Blogger வி. ஜெ. சந்திரன் said...

உண்மையில் பலரும் கடிபடும் போது இடையில் வேடிக்கை பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறது :) மற்றும்படி வலைப்பதிவு எழுத்து பற்றிய எனது கருத்தை ஏற்கனவே வேறொருவருடைய பதிவின் ஒரு பின்னூட்டத்தில் பதிவு செய்திருக்கிறேன்.
( அப்படா உங்க பதிவ பத்தி 2 வசனம் எழுதீட்டன் :))). நான் ஏற்கனவே இப்ப கேக்க போற விசயத்தை அது சம்பந்தமான பதிவிலை கேட்டன். அது உங்க கவனத்தை பேறேல்லை. அதாலை இத நீங்களும் அடிக்கடி பாப்பிங்க எண்டதால இங்க கேக்கிறன். ;)

//உங்களுடைய Template பகுதியில் Page Elements பிரிவினைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இனி இறுதிப் பின்னூட்டங்களை காட்சிப்படுத்துவதற்கேதுவாக Add a Page Element இனை அழுத்தி தோன்றும் புதிய window இல் Feed என்னும் பகுதியில் ADD TO BLOG இனை அழுத்துங்கள்.//

இது எங்க இருக்கு?
Template பகுதிலை அப்பிடி ஒண்டையும் காணமே )

7:46 AM  
Blogger கொழுவி said...

அனைத்துக் கொழுவிகளுக்கும் அன்பான அறிவித்தல். மறு அறிவித்தல் வரும் வரை எவரும் கொழுவிப் பின்னூட்டங்களை இட வேண்டாம்.

8:07 AM  
Blogger சயந்தன் said...

சின்னக்குட்டி மூன்றாம் தரமும் வருகை தந்துள்ளீர்கள். அதற்கு நன்றி. அற்புதன் முரண்களைச் சுட்டியமைக்கு நன்றி. பதிவுகள் சரியாகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்னும் உங்களினதும் எல்லோரினதும் ஆதங்கம் போலவே பின்னூட்டங்களும் சரியாகப் பயன்படுத்தப் படுகின்றனவா என்னும்.. ஆதங்கமில்லை.. அலட்டல்.

10:20 AM  
Blogger சயந்தன் said...

மலைநாடான் வருகைக்கு நன்றி;)

10:22 AM  
Blogger அற்புதன் said...

//கொழுவி said...
அற்புதன் said...
//சின்னக்குட்டியின் கருத்தே எனதும்.//
அற்புதன்,
என்ன இது?
இந்தப்பிரச்சினையைத் தொடக்கிவைச்சதே நீங்கள்தானே?
ஒருத்தனும் பிரியோசினமா எழுதிறேல, துறைசார்ந்த பதிவுகள் எழுதிறேல, சும்மா அலட்டிக்கொண்டிருக்கிறாங்கள் எண்டமாதிரி சொன்னியள்.
இஞ்ச சின்னக்குட்டி சொன்னது உங்கட கருத்துக்கு முற்றிலும் எதிரானது. ஆனால் இந்தப்பதிவில கூட்டணி சேந்திட்டியள்.
(அரசியலில இதெல்லாம் சகஜம் எண்டு சொல்லிப்போடாதைங்கோ ;-)//

ஓ இது நான் தொடங்கி வச்சதின்ர எதிரொலியா? நான் சின்னக்குட்டியின் 'நன்றி தெரிவித்தல்' என்னும் கருத்தோடு உடன்படுகிறேன் என்று வர வேண்டும்.

//சயந்தன் said...
ஆகவே அற்புதன் அவர்களே.. பதிவுகள் பதிவர் ஒருவரின் ஏதாவது ஒரு எண்ண வெளிப்பாடாக இருக்கலாம் என்பதனை ஏற்றுக் கொள்கிறீர்களா..? சின்னக் குட்டி சொன்னது போல அவை கண்டிப்பாக முழுமையானதாகவும் தூய்மையானதுமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையா..? நன்றிப் பின்னூட்டம் ஒருவரின் தனி விருப்பு எனில் பதிவுகள் ஏன் தனி விருப்பாக இருக்கக் முடியாது. ?
அப்புறம் சின்னக் குட்டியின் இரண்டாவது வருகைக்கு நன்றி.

ஓகே.. பாயாசம் செய்வது எப்படி என்ற பழைய ஒலிப்பதிவை ஒலிபரப்புவதற்குரிய புறச் சூழலை ஏற்படுத்தியாகி விட்டது. //

சயந்தன் சொல்லுறது இப்ப விளங்குது அதாவது பதிவு என்ன வாகவும் இருக்கட்டும் ஆனால் உந்த நன்றி என்று சொல்லுற இரண்டு வார்த்தைகளை மட்டும் பின்னூட்டத்தில வரக்கூடாது.

பதிவுகள் எல்லாமுமே அவர் அவர் தனி விருப்பங்கள் தான்.இதில நான் போட்ட பதிவு, பதிவுகள் எப்படி இருக்க வேணும் எங்கிற எனது ஒரு சுய மீட்டலே அன்றி வேறொன்றும் இல்லை.அதன் தலைப்பே 'ஏன் வலைப் பதிகிறோம்' என்பது தான்.எனக்கு கிடைக்கும் கொச்ச நேரத்தில எனக்கு எது சரியெனப் படுகிறதோ அதைத் தான் நான் எழுதப் போகிறேன்.அதில் என்னைப் பற்றி எழுதுவதா அதாவது ஒரு டயறியைப் போல இல்லை எதாவது தெரிந்ததை பயன் உள்ளதாக நான் கருதும் விடயத்தைச் சொல்லப் போகிறேனே என்பதைத் தீர்மானிக்க எனக்கு நானே எழுத முதல் ஒரு சுய மீட்டலாக இட்ட பதிவு அது.அதற்கு வந்த பினூட்டங்களிலிருந்தும் நான் ஒரு பதிவு எண்டா மற்றவை என்ன நினைக்கினம் என்பதையும் கற்றுக்கொண்டேன்.அதில விஜே போட்ட பின்னுட்டத்திற்க்கு நான் அழித்த பதிலையும் அப்படித் தான் எழுதி இருக்கன்.ஒரு பதிவு எப்படி இருக்க வேணும் எண்டு ஒவ்வொரு வருக்கு ஒரு பார்வை இருக்கும் அதன்படி தான் மற்றைய பதிவுகளையும் ஒவ்வொருவரும் மதிப்பிடுவம்.அது இன்னொரு பதிவருக்கு உடன்பாடானதாக இருக்காது.அதற்காக நான் சொல்ல ஏலாது எனது பார்வை தான் சரி எண்டு.ஆனால் எனது விருப்பத்தை ஏன் எதற்க்கு என்று ஒரு வேண்டுகோளாக தர்க்க ரீதியாகத் தெருவிக்கலாம் அவ்வளவே.

இதில ஒரு இரண்டு வரியில நன்றி என்னும் பின்னூட்ட எழுத்து மட்டும் உங்களுக்குப் பிரச்சினையா இருக்கு ஆனா ,பதிவு எப்படி இருந்தாலும் பறுவாயில்லை என்பது தான் எனக்கு உங்கள் அலட்டலில் முரணாக இருக்கிறது.

மற்றப்படி பின்னூட்டங்கள் பயன் உள்ளவையாக ,பதிவைப் போலவே இருக்க வேணும் என்பதில் எனக்கு கருத்து வேறு பாடு கிடையாது.இதில நன்றி என்று ஒரு வார்த்தையில் தெருவிப்பதால் பதிவினதோ அன்றிப் பின்னூடங்களினதோ பயன் பாட்டை அது பாதிக்கிறது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.:-)

12:03 PM  
Blogger சயந்தன் said...

நன்றி அற்புதன். நன்றி என்பது பண்பாடு கலாசாராம் என்பதெல்லாவற்றையும் தாண்டி அது பயன்படுத்தப் படுகின்ற தேவை என்ன என்பதனை நான் அறிவேன்.

தமிழ்மணம் தோன்றிய காலத்தில் இருந்தே வலையில் குப்பை கொட்டி வருபவன் என்ற விதத்தில் சொல்கிறேன். தமிழ்மணத்தின் ஆரம்பத்தில் அண்மையில் மறுமொழி இடப்பட்ட பதிவுகள் திரட்டப் படுவதில்லை. அது பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட வசதி. மறுமொழி இடப்பட்ட பதிவுகள் திரட்டப்படத் தொடங்கிய பின்னரே நன்றிப் பின்னூட்டங்களின் வருகையும் தோன்றியது.

ஒரு பதிவர் என்ற வகையில் அவரது எழுத்துக்கள் படிக்கப் பட வேண்டும் என எதிர்பார்ப்பதுவும் அதற்காக அது தமிழ்மண முகப்பில் அவ்வப்போது கொண்டுவரப்பட வேண்டும் என செயற்படுவதும் இயல்பானதும் சாதாரணமானதும் ஆகும். இந்த நன்றிகள் (ஆரோக்கியமான) பதிவுகளின் (ஆரோக்கியமான) பின்னூட்டச் சூழலில் என்ன பங்களிப்பைத் தருகின்றன என பேசினோம்.

தவிர தனியே நன்றிப் பின்னூட்டங்கள் பற்றி நாம் பேசவில்லை. ஆரோக்கியமான பின்னூட்டச் சூழல் பற்றிப் பேசிய போதே நன்றியறிவித்தல் பற்றியும் பேசப்பட்டது. சொல்லப்போனால் இதுவும் ஒரு சுயமீட்டலே உங்களைப் போலவே..

12:46 PM  
Anonymous Anonymous said...

எது பயனானது..? எது பயனற்றது.. என்பது பற்றியெல்லாம் நீங்கள் அலட்டிக் கொள்ளாமல் உங்களால் எது முடியுதோ அதை செய்யுங்கள். வாசிக்கும் நாங்கள் முடிவெடுப்போம். எது தக்கது எது தகாதது என.. எழுதும் நீங்களே இது பற்றியெல்லாம் பேசக் கூடாது. எழுதுவதோடு அல்லது பேசுவதோடு உங்கள் பணி முடிந்தது. publish பட்டனைத் தட்டிவிட்டு போயிட்டே இருங்கள்.

3:44 PM  
Anonymous Anonymous said...

3 நபர்களைச் சேர்த்துக் கொண்டு இப்படி எவ்வாறு தரமாக ஒலிப்பதிய முடிகிறது..?

3:00 AM  
Blogger ✪சிந்தாநதி said...

வலைப்பதிவுகள் டைரிக்குறிப்புகள் என்பது தான் ஆரம்ப நிலை. இன்று அதன் வீச்சு மாறி விட்டது. ஆனாலும் இன்றும் சொந்த அனுபவக் குறிப்புகளுக்கு வலைப்பதிவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. கதை, கவிதை, மொக்கைகளை விட ஆரோக்கியமான பின்னூட்டங்களும் அனுபவப் பகிர்வுகளுக்கு கிடைக்கிறது.
அடுத்தவர் டைரியை அவரின் சம்மத்த்தோடு படிக்கும் சுகமே ;)

அப்புறம் 'பின்னூட்டக் கயமை', 'டெஸ்ட் கமென்ட்' என்பதெல்லாம் விட நன்றி சொல்வது நல்லது தானே ;)) (இரண்டும் ஒன்றுதான் என்ற போதும்!!!)

7:03 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home