25.10.05

காதலைப் பற்றிக் கதைக்கப் போறன்

அதென்ன திடீரென்று காதலைப்பற்றிக் கதைக்க வேணும் எண்டு யாரும் கேட்கக்கூடாது. என்ரை பழைய பதிவொண்டில எங்கேயோ ஒரு தடவை காதலுக்கான உடனடிக்காரணங்களில அழகும் ஒண்டு எண்டு சொன்னதுக்காக அப்ப கொழும்பிலயும் இப்ப சிங்கப்பூரிலும் இருக்கின்ற கீது காரசாரமா ஒரு பதில் எழுதியிருந்தவ. (அதில என்னை யோசிக்க வைச்ச ஒரு விசயம் என்னெண்டால் அவவின்ரை பதிவில இருந்த சயந்தன் உம்மட்டை இருந்து இதை நான் எதிர்பாக்க வில்லை எண்டது தான். ) அவவின்ரை பதிவுக்கு என்ரை பதிலை ஒரு பதிவாப் போடலாம் எண்டு தான் இருந்தன். பிறகு மறந்திட்டன்.

ஆனாலும் இப்பவும் காதலுக்கு அழகும் ஒரு உடனடிக்காரணம் எண்டதில நான் உறுதியாத்தான் இருக்கிறன். வலு சிம்பிளா என்னாலை விளக்க முடியும். யார் யார் எண்டே தெரியாத இருவர் ஒருவரை ஒருவர் நெருங்க வேண்டும் எண்ட ஆசையையும் எதிர்பார்ப்பையும் உடனடியாத் தாறதில அழகுக்கு ஒரு முக்கிய இடமிருக்கு!

இங்கை அழகெண்டதை எப்பிடி வரையறை செய்யலாம் எண்டும் ஒருவருக்கு அழகாத்தெரியறது இன்னொருவருக்கு அழகில்லாமல் தெரியும் எண்ட கேட்டலுத்துப்போன கருத்தக்கு ஒரு பதில் சொல்லுறன். அதாவது ஒருவருக்கு அழகாத்தெரியுதே.. அந்த அழகை பற்றித்தான் நான் கதைக்கிறன்.

வேணுமெண்டால் இப்பிடிச்சொல்லலாம். காதலுக்கு முந்திய ஒரு ஈர்ப்பு இருக்குது தானே.. அதுக்கெண்டாலும் இந்த அழகுதான் காரணமாயிருக்கு. அதே நேரம் இப்பிடி எந்த அழகு தொடர்பான ஈர்ப்பு எதுவுமில்லாமல் படிக்குமிடங்களிலோ பணிபுரியும் இடங்களிலோ ஒன்றாக இணைந்து இருக்க சந்தர்ப்பம் கிடைத்தவர்களுக்கும் நாட்செல்ல செல்ல இயல்பாக காதல் அரும்பக் கூடும். சிலர் இதைத்தான் உண்மையான காதல் எண்டுகினம்.

அதைவிடுவம். இங்கை ஒஸ்ரேலியாவில காதல் , கல்யாணம் பற்றி ரண்டு தமிழ்ப் பெண்களோடு கதைக்கும் சந்தர்ப்பம் போன முறை சிட்னி போயிருந்த சமயம் கிடைச்சது. அதில ஒருத்தியை கடந்த வருடமே எனக்கு அறிமுகம். கடந்த வருசம் சிட்னியில நடந்த ஒரு நிகழ்வில அவவும் அவவின்ர boyfriend ம் மும்மரமா நிகழ்வு வேலைகளை செய்து கொண்டிருக்க சந்தோசமாய் இருந்தது.

மற்றவவை இந்த முறை தான் தெரியும்.

ஒரு நாள் ரெயினுக்குள்ளை வரும் போது அவையோடு கதைச்சுக் கொண்டு வந்தன். முதலாமவர் தன்னுடைய காதல் உடைந்து விட்டதாக ஒரு கட்டத்தில சொன்னா. அது இங்கெல்லாம் சர்வ சாதாரணம் என்பதால் அது பற்றி எந்த அதிர்ச்சியையும் முகத்தில் காட்ட இல்லை நான். அல்லது காட்டுவது போல நடிக்கவும் இல்லை.

'அவன் எப்ப பாத்தாலும் நீ அதைச் செய்யாதை இதைச் செய்யாதை எண்டு சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு அது பிடிக்கவில்லை.. ' என்றாள் அவள். எனக்கதில சொல்லுறதுக்கு ஒண்டும் இல்லாத படியாலை எதுவும் சொல்லேல்லை எண்டாலும் பெண்களுக்கு குறிப்பாக காதலிகளுக்கு மன்னிக்கவும் காதலிக்கு பிடிக்காத விடங்களாக அவற்றை குறிப்பெடுத்துக்கொண்டிருந்தன் மனசுக்குள்ளை.

அவ பொதுவா தன்னோடை பல்கலைக்கழக மட்ட அதுவும் தமிழ்ப்பெடியள் பற்றித்தான் கதைச்சா. இவங்கள் எல்லாரும் தங்களாலை எந்தப் பெண்ணையும் காதலிக்க வைக்க முடியும் எண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறாங்கள் எண்டா.

அப்பிடியில்லை எந்தப்பெண்ணையும் என்னாலை காதலிக்க வைக்க முடியாது.. சிலரை மட்டும் தான் என்னாலை முடியும் எண்டு நான் பகிடிக்கு சொன்னன்.

இதுக்கிடையில பக்கத்தில இருந்தவ அம்மா அப்பா எங்களுக்கு ஒரு நாளும் கெட்டது செய்ய மாட்டினம். அவையள் தெரிவு செய்தால் அது சரியாத்தான் இருக்கும். எண்டு சொன்னா.

தனக்கு ஒரு பெடியனைப் பிடிச்சிருந்தால் தான் நேரடியா போய் அப்பாட்டை சொல்லுவாவாம். இதுவரை ஒருத்தரையும் பிடிக்கேல்லையாம்.

பதினெட்டு வயசாகுது.. இன்னும் ஒருத்தன் மேலை கூட மனசுக்குள்ளை ஒரு இது வரேல்லையா எண்டு கேட்டதுக்கு.. அப்பிடி ஒரு இது வாறதுக்கெல்லாம் அப்பாட்டை போய் சொல்ல வேணும் எண்டால் நான் ஒவ்வொரு நாளும் எல்லோ அப்பாட்டை போய் சொல்லிக்கொண்டிருக்க வேணும் எண்டு சொல்ல எனக்கு சிரிப்பு தாங்க முடியேல்ல.. எங்களை மாதிரித்தான் பெட்டையளும்.. எண்டு நினைச்சுக் கொண்டன்..

இதுக்கிடையில நல்ல பெடியளை எப்பிடிக் கண்டு பிடிக்கிறது எண்டு முதலாமவ கேட்டா.. பேசாமல் என்னை மாதிரி இருப்பாங்கள் எண்டு சொல்லியிருக்கலாம் தான். ஆனா ஒரு அண்ணனா.. ?? என்னை மதிச்சு கேட்டவைக்கு ஒரு தரமான பதிலைச் சொல்ல வேணும் எண்டதுக்காக ஒன்று சொன்னன்.

உன்னை ஒருத்தன் பிடிச்சிருக்கெண்டு சொன்னால் வந்து அப்பாட்டை சொல்லு என்று சொல்லு.. துணிந்து வந்து கதைத்தானென்றால் கொஞ்சம் நல்ல பெடியன். ஆனா இதெல்லாத்துக்கும் முதல் உனக்கும் அவனை பிடிச்சிருக்க வேணும்.

( அண்மைக்காலமா நான் காதல் பற்றி எழுதுற பதிவெல்லாத்தையும் நானே தூக்க வேண்டியிருக்கிறது. இதுவாவது இருக்குமென்று நம்புவோம்)

15 Comments:

Blogger வசந்தன்(Vasanthan) said...

இண்டைக்கிரவு வான்வழி விழும் குட்டுக்கு முதல் எல்லாரும் வாசிச்சுப்போடுங்கோ.
அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல முடியும்.

ஆனா சயந்தன்,
"பெண்டாட்டி தாசன்" தொடரைத் தொடங்கிறதா இல்லையா எண்டத இதில வச்சுத்தான் முடிவெடுப்பன்.

10:48 PM  
Blogger Thats Secret said...

ஒவ்வொருத்தருக்கும் துணை பற்றி
கற்பனை உண்டு
அதுக்கு யாராவது ஓரளவு நெருங்கி வந்தாலும்
காதல் நெருப்பு பத்திக்கும்
என்னை பொறுத்தவரை காதல்ங்கிறதே
பாலினக்கவர்ச்சி தான்
மத்தபடி உங்க மொழி நடை
அழகாகவும் (எனக்கு) புதுசாவும் இருக்கு

11:43 PM  
Anonymous Anonymous said...

//அப்பிடி ஒரு இது வாறதுக்கெல்லாம் அப்பாட்டை போய் சொல்ல வேணும் எண்டால் நான் ஒவ்வொரு நாளும் எல்லோ அப்பாட்டை போய் சொல்லிக்கொண்டிருக்க வேணும் எண்டு சொல்ல எனக்கு சிரிப்பு தாங்க முடியேல்ல.. எங்களை மாதிரித்தான் பெட்டையளும்.. எண்டு நினைச்சுக் கொண்டன்//

தாங்கள் அப்பிடியோ

2:59 AM  
Blogger சயந்தன் said...

நன்றி graphix! வாசிக்க கடினமாயில்லைத்தானே!

அநாம்ஸ்.. எல்லோரும் அப்படித்தான் என்று சொல்வதில் உள்ள பாதுகாப்பு பிரச்சைனையை கருத்திற் கொண்டு ஒரு சிலர் அப்பிடித்தான் என்கிறேன்..

6:48 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: ஐயோடா

//ஆனா ஒரு அண்ணனா.. ?? //

ஐயோடா..

0.31 27.10.2005

7:32 AM  
Blogger இளங்கோ-டிசே said...

இது பதிவு ©
...
//உன்னை ஒருத்தன் பிடிச்சிருக்கெண்டு சொன்னால் வந்து அப்பாட்டை சொல்லு என்று சொல்லு.. துணிந்து வந்து கதைத்தானென்றால் கொஞ்சம் நல்ல பெடியன். ஆனா இதெல்லாத்துக்கும் முதல் உனக்கும் அவனை பிடிச்சிருக்க வேணும்.
//
இப்படித்தான் நாலைந்து வருசத்துக்கு முன்னாலை எனக்கொரு அக்கா அறிவுரை தந்தவா. என்ன, அப்பா என்பதற்குப் பதிலாய் 'அம்மாட்டை போய்ச் சொல்லச் சொல்லு' என்பது மட்டுந்தான் வித்தியாசம். பாரும், அவா சொன்னதைக் கேட்டு அப்படியே நடக்கும் என்று நம்பி இன்னும் single யாய் living exampleயாய் நான் இருக்கையில் அந்தப் பிள்ளையையும் கெடுத்து விடாதையும் என்று நினைவுபடுத்தத்தான் நான் கண்ணீரும் கம்பலையுமாய் இதை எழுதுகிறன்.

8:24 AM  
Blogger சயந்தன் said...

அதில்லைப் பாரும் டிசே.. அவாக்கு முன்னாலை கல்லுப் பிள்ளையார் மாதிரி நான் இருக்க என்னட்டையே கேக்கிறா.. நல்ல பெடியளை எப்பிடி அடையாளம் காணுறதாம்.. அதுதான் வந்த கோபத்தில ஆரா இருந்தாலும் அவவின்ரை அப்பாட்டை போய் அடிவாங்கட்டும் எண்டு அப்பிடிச்சொன்னனான்.

9:13 AM  
Blogger இளங்கோ-டிசே said...

அடடா உம்மளை மாதிரி பெண்களின் உளவியல் நன்கு புரிந்த ஒருவர் எனக்கு அருகில் இருந்திருந்தால் நான் எப்பவோ கரை சேர்ந்திருப்பேன் :-).

9:26 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

அடடா உம்மளை மாதிரி பெண்களின் உளவியல் நன்கு புரிந்த ஒருவர் எனக்கு அருகில் இருந்திருந்தால் நான் எப்பவோ கரை சேர்ந்திருப்பேன் :-).

DJ are you so desparate :-)

10:54 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: :)

என்ன எல்லாரும் கரை சேர்வது பற்றியே எழுதுகிறார்கள்..? :)

13.58 27.10.2005

8:59 PM  
Anonymous Anonymous said...

அண்ணனா?? அது என்ன அண்ணனா? உறவில்லாத ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு காதலனாக இல்லாட்டி கட்டாயம் அண்ணனா தான் இருக்க வேணுமா?

உண்மையில இந்த மாதிரி சொல்றது ஒரு பாதுகாப்பிற்கு எண்டு தான் நான் சொல்லுவன். நண்பர்களாக பழகுகிறம் என்று சொல்றவை காதலராக மாறுகிற சந்தர்ப்பங்கள் நிறைய. அதுக்காகத் தான் அண்ணன், தங்கச்சி உறவை இழுக்கினம்.

நாங்கள் நண்பர்கள் என்று சொல்லிப் பழகிறவங்கள வேற மாதிரி நினைச்சு யாரும் ஏதும் கேட்டா "சீ.. நாங்கள் அண்ணன், தங்கச்சி மாதிரிப் பழகிறம்... என்ன இப்பிடிக் கேட்கிறாய்?" என்ற மாதிரித் தான் சொல்லுவினம். (நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என்று சொல்லுறவையும் இருக்கினம்.. அப்பிடி சொல்றவை மெத்தக் குறைவு.)

உந்த மாதிரி அண்ணனா என்று சொல்றவையை நான் வெறுக்கிறன். இருந்தாலும் அவைக்கு ( சயந்தனும் இதில ஒன்று:-) ) தேவையில்லாத பயத்தைக் கொடுக்கக் கூடாது என்றதுக்காக அப்பிடி சொல்றவையை சொல்லட்டும் என்று விட்டிட்டன்.

//எங்களை மாதிரித்தான் பெட்டையளும்.. எண்டு நினைச்சுக் கொண்டன்//
நிறைய விடயங்கள்/உணர்வுகள் மனிதர்களுக்கே பொதுவானது தான். ஆனாலும் ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம் என்ற மாதிரி அல்லது எடுகோள்களை வைச்சுக் கதைக்கிற மாதிரித் தெரியுது.

//அதே நேரம் இப்பிடி எந்த அழகு தொடர்பான ஈர்ப்பு எதுவுமில்லாமல் படிக்குமிடங்களிலோ பணிபுரியும் இடங்களிலோ ஒன்றாக இணைந்து இருக்க சந்தர்ப்பம் கிடைத்தவர்களுக்கும் நாட்செல்ல செல்ல இயல்பாக காதல் அரும்பக் கூடும். சிலர் இதைத்தான் உண்மையான காதல் எண்டுகினம்//
இப்படியான சந்தர்ப்பங்களில் கூட உண்மையான காதல் தான் அரும்பும் என்று சொல்ல முடியாது. ஆனால் பார்த்தவுடன் வாற ஈர்ப்பை(அழகின் காரணமாக) விட பழகின பிறகு வாற காதல் உண்மையாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் என்று நான் நம்பிறன்.

உண்மையான காதல், பொய்யான காதல், ஈர்ப்பு, சலனம், அது எதுவா வேணுமானாலும் இருந்திட்டுப் போகட்டும். வாழ்க்கை சந்தோஷமா இருந்தா அதை விட வேற என்ன வேணும்?

11:16 AM  
Blogger சயந்தன் said...

//உந்த மாதிரி அண்ணனா என்று சொல்றவையை நான் வெறுக்கிறன்//

சாயி நீங்கள் என்ன சொன்னாலும் நான் உமக்கு அண்ணன் தான்.. அதில மாற்றமில்லை.. :)

//உண்மையான காதல், பொய்யான காதல், ஈர்ப்பு, சலனம், அது எதுவா வேணுமானாலும் இருந்திட்டுப் போகட்டும். வாழ்க்கை சந்தோஷமா இருந்தா அதை விட வேற என்ன வேணும்?
//

ஒரு வாசகம் எண்டாலும் திருவாசகம் மாதிரி சொல்லியிருக்கிறியள்..

1:35 AM  
Blogger சிவா said...

நல்லா கதைக்கிறீயள். :-)

9:03 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: vaamanikandan

அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க!...காதல் ஒரு வெட்டியான வேலை..புனிதம்,தெய்வீகம்னு torture பண்ணுறாங்க.

18.55 29.10.2005

6:28 AM  
Blogger சயந்தன் said...

சிறுமி!

காக்கா குருவி கூட இல்லையோ.. அது எந்த நாடு!

மணிகண்டன்.. வெட்டியான வேலையொன்றை முடித்த பிறகு வாற வெறுப்பில எழுதியிருக்கிற மாதிரி இருக்கு!

காதலிக்கிற சமயத்தில இருக்கிற காதல் தான் புனிதமானது.. தெய்வீகமானது.. மற்றும்படி அதற்கு முதல் வந்த காதல் எல்லாம் வெறும் இனக்கவர்ச்சி.. வயசுக் கோளாறு.. ஹி ஹி

9:21 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home