1.9.05

மெல்பேண், சிட்னி, நியூஸிலான்ட்- சங்கமம்

தென்துருவ வலைப்பதிவர் கழகமும்
ஒரு பகிரங்க அறிவித்தலும்.

வலைப்பதிவர் சந்திப்பொன்றை ஒஸ்ரேலியாவில நடத்தி நிறைய நாளாச்சு. கடைசியா போன சித்திரை மாசம் எண்டு நினைக்கிறன் ஒரு வலைப்பதிவா சந்திப்பை நானும் வசந்தனும் திறம்பட நடத்தி முடிச்சிருந்தனாங்கள். இந்த இடைப்பட்ட காலத்தில எங்கடை மெல்பேண் வலைப்பதிவர் கழக கண்மணிகளுக்கு நிறைய நேர மற்றும் இன்னொரன்ன நெருக்கடிகள் காரணமாய் ஒண்டும் சரிவர எழுத முடியேல்லை. ஒஸ்ரேலியாக்கு வந்த புதுசில வீடும் படிப்பும் வேலையும் எண்டிருந்த எங்கடை கழக கண்மணிகள்.. இப்ப உலகமும் ஒஸ்ரேலியாவும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிடி பட வீட்டிலயே இருக்கிறதில்லை.

முந்தியொரு காலத்தில தினமும் பதிவுகள் போட்டு வந்த நாங்கள் இப்பவெல்லாம் ஏதோ நாங்களும் இருக்குறமுங்கோ எண்டு காட்டுறதுக்காகவே படங்களும் பத்துவரிப் பதிவுகளும் போட்டுக்கொண்டிருந்தம்.

இப்பிடி வலைப்பதிவகளில் எங்கடை மெல்பேண் கழக மூத்த உறுப்பினர்களுக்கு ஆர்வமும் உற்சாகமும் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைஞ்சு கொண்டு வரேக்கை முந்தநாள் (நேற்று முன்தினம்) இரவு பத்து மணிக்கு பிற்பாடு!! (முந்தியெண்டால் இரவு 8 மணிக்கெல்லாம் வீட்டை வந்திடுவம்.) அவசரமான ஒரு மீற்றிங்கை வசந்தன் கூட்டினார். அதுவும் City Flinder Street Station க்கு பக்கத்தாலை ஓடுற yara ஆற்றங்கரையில இருந்து கொஞ்ச நேரமும் நடந்து கொஞ்ச நேரமும் மீற்றிங் நடந்திச்சு.

அந்த நேரம் பயங்கர காத்து. மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில காத்து வீசினது. சரியா 10.15 க்கெல்லாம் நான் வசந்தன் மற்றது அருணன் இவையெல்லாம் அந்த இடத்தில சந்திச்சம்.

வசந்தன் கொஞ்சம் குண்டாயிட்டார் இப்ப. அருணன் கொஞ்சம் வளந்திட்டார்.

வசந்தன் நேரடியா விசயத்துக்கு வந்திட்டார். 'உங்களையெல்லாம் ஏன் கூப்பிட்டனான் தெரியுமே எண்டார்.'

'தெரிஞ்சிருக்கும் எண்டால் எங்களை கூப்பிட்டிருப்பீரோ எண்டு நான் பதிலுக்கு ஒரு கேள்வியைப் போட்டன். வசந்தன் அதைப்பத்தி சட்டை செய்யாமல் நான் சொல்லப் போற திட்டத்தை பற்றி வடிவாக் கேளுங்கோ.. அதுக்கு பிறகு நீங்கள் கதைக்கலாம் எண்டார். அவர் என்னை மனசில வைச்சுத்தான் அதை சொல்லியிருக்க வேணும்.

'இவ்வளவு நாளும் நாங்கள் வலைப்பதிவில பெரிசா ஒண்டும் எழுதாமல் இருந்திட்டம். அது ஏன் எதுக்கு எண்டெல்லாம் நான் ஆராயப்போறதில்லை. ஆனா.. ஒரு மூத்த மெல்பெண் வலைப்பதிவர் எண்ட முறையில தொடந்தும் இதை நான் அனுமதிச்சுக் கொண்டிருக்க முடியாது. எண்ட படியாலை'..... எண்டு வசந்தன் இழுக்க இடையில குறுக்கிட்டார் அருணன்.

'நீர் பிரச்சனை விளங்காமல் கதைக்காதையும்.. நீர் என்னைத்தான் சொல்லுறீர் எண்டு விளங்குது. ஆரம்பத்தில வலைபதிவு தொடங்கிட்டு இடையில கைவிட்ட ஆள் நான் தான். அனா அதுக்கு காரணங்கள் இருக்கு. எண்டாலும் அந்தக் காரணங்களை குறிப்பிட்டு அதை ஒரு பதிவாக்கி விடைபெறுகிறேன் நண்பர்களே எண்டு போட்டுவிட்டு பிறகு கொஞ்சக் காலத்தாலை என்னாலை வலைப்பதியாமல் இருக்கவே முடியுதில்லை எண்டு வாறாக்கள் மாதிரி நான் செய்யேல்லையே.. ' எண்டு அருணன் நீட்டி முழக்கினார்.

'ஷ்் உதையெல்லாத்தையும் விடும்.. இப்ப நான் சொல்லுறதை கேளும்.. ' எண்டு ஒருக்கா தொண்டையைச் செருமிக்கொண்டு தொடங்கினார்.

'இவ்வளவு நாளும் மெல்பேண் வலைப்பதிவர் கழகமாயிருந்த எங்கடை அமைப்பை நான் இண்டையில இருந்து தென்துருவ வலைப்பதிவர் கழகமா அதாவது ஒரு அகண்ட வலைப்பதிவர் கழகமா மாத்துறன்..' எண்டு விட்டு நாங்கள் ஏதும் சொல்லுறோமோ எண்டு பாத்துக் கொண்டிருந்தார்.

நாங்கள் ஏதும் சொல்லேல்லை எண்டுற அதேவேளை வசந்தனுக்கு தட்டிட்டுதோ எண்டும் நினைக்கவில்லை.

'இந்த தென்துருவ வலைப்பதிவர் கழகம் 3 பிரிவுகளை உள்ளடக்கியிருக்கும். சிட்னி, நியூஸிலான்ட், மெல்பெண்.. இந்த மூண்டு இடத்திலயும் மெல்பேண் தான் தலைமைச்செயலகமாவும் அதிகார மையமாவும் இருக்கும்.'

மீற்றிங் எண்டு வந்தால் நாலு பேருககு முன்னாலை எழும்பி நிண்டு மூண்டு கேள்வி கேக்க வேணும் எண்ட படியாலை இந்த இடத்தில நான் ஒரு கேள்வி கேட்டன்.

'அது எப்பிடி நாங்களாவே மெல்பேணை தலைமைச் செயலகமாக்கிறது ..? .. இது ஜனநாயக விரோதமெல்லோ! இந்தக் கேள்விக்கு பதிலளிக்காவிட்டால் மாற்றுக்கருத்தை மதிக்காதவர் எண்டு வரலாறு நாளையிண்டைக்கு உம்மைத் தூற்றும் எண்டு நான் சொன்னன்.'

இந்தக் கேள்வி மீற்றிங்கில சலசலப்பை உண்டாக்கினது. நான் கேட்ட ஒரு கேள்வி ஒரு இடத்தில சலசலப்பை உண்டு பண்ணுறது எண்டுறது எனக்கு சரியான சந்தோசம். மற்றும் படி அந்தக் கேள்விக்கு பதில் கிடைக்க வேணுமெண்ட எந்த தேவையும் எனக்கு கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் சும்மாதான் அப்பிடிக் கேட்டன். ஏனெண்டால் நானும் ஒரு பெரிய ஆள் எண்டு காட்டத்தானே வேணும்.

சலசலப்பெல்லாம் முடிய ஒருமாதிரி வசந்தன்ரை எண்ணத்தை நாங்கள் மனப்பூர்வமா ஏற்றுக்கொண்டம். அதன்படி நியூஸி பிரிவுடனும் சிட்னிப்பிரிவினருடனும் சுமுகமான ஒரு உறவை ஏற்படுத்தி அவையை ஒரு குடையின் கீழை காணாட்டி ரண்டு மூண்டு குடைக்கு கீழை கொண்டாறதுக்கான முயற்சிகளில இப்ப இருந்தே ஈடுபடுறது எண்டும் முடிவெடுத்தம்.

இந்த எங்கடை திட்டங்களுக்கு சம்மரிலிருந்து (Summer) திரும்புதல் எண்டு வசந்தன் பேர் சூட்டினார். அதை நாங்கள் கைதட்டி வரவேற்றம்.

எங்கடை திட்டத்தின்ரை முதல்ப்டியாய், ஒரு நல்லெண்ணை.. மன்னிக்கவும் நல்லெண்ண முயற்சியாய் எங்கடை பிரதிநிதி ஒருவரை சிட்னிக்கு அனுப்பி அங்கை இருக்கிற பிரிவினரோடு பேச்சுக்களை நடத்தி எங்கடை ஒரு குடையின் கீழி கொண்டுவருதல் எண்டுற திட்டத்துக்கு இசைய செய்யிற அது முடியாட்டி பணியச் செய்யிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் எண்டு தீர்மானிச்சம்.

அதன் படி வசந்தனை சிட்னிக்க அனுப்ப தீர்மானிச்சிருக்கிறம். (அல்கொய்டா அமைப்பு சிட்னியையும் தாக்குறதுக்கு முடிவு செய்திருக்கிறது எண்ட படியாலை பாதுகாப்பு காரணங்களுக்காக வசந்தன் எப்ப சிட்னி போறார் எண்டதை பகிரங்கமா இப்போதைக்கு வெளியிட முடியாது.)

மீற்றிங்கின் முடிவில் அருணன் சில கோரிக்கைகளை வைச்சார். Modern Girl ஒஸ்ரேலியால இருந்து முந்தி பதியிறன் எண்டு சொன்னவ. அவ எங்கையெண்டு தெரியேல்லை. சிட்னியா மெல்பேணா அல்லது வேறெங்காவதா எண்டு சொன்னால் வசதியாயிருக்கும். மெல்பேண் எண்டு சொன்னால் எங்கடை அதிகார மையத்தில அவவுக்கு ஒரு அதியுச்ச பதவியை குடுக்க நாங்கள் இணங்கியிருக்கிறம்.

தென்துருவ வலைப்பதிவர் கழகம் எண்டுறது ஒரு பரந்த விரிந்த எண்ணம் சிந்தனை செயற்பாடு. குழுக்கள் குழுக்களா இருக்கிறதை விட இப்பிடி ஒரு பெரிய இயக்கமா வளருறதை தான் நாங்கள் விரும்பிறம். அப்பிடி ஒரு எண்ணத்தலை தான் அந்த கழகத்தின்ரை அதிகாரத்தை கையில் எடுத்திருக்கிறம்.

முக்கிய குறிப்பு: இதன்படி சிட்னி மற்றும் நியுஸி பிரிவினர் என்ன செய்தாலும் அதற்கு மெல்பேண் தலைமைச் செயலகத்தில் அனுமதி பெற வேண்டும். விரைவில் நியூஸியில் நடக்க இரக்கிற வலைப்பதிவர் மாநாட்டுக்கு எங்களுக்கு சரியான முறையில் அறிவிக்கவும் இல்ல. அனுமதி வாங்கவும் இல்ல. இதை சம்மந்தப்பட்டவர்கள் கவனிக்க வேணும்.

இனியும் தொடரும்

14 Comments:

Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Iyo

ம்.. ஆரம்பிச்சுட்டாங்கப்பா..

10.12 2.9.2005

5:13 PM  
Anonymous Anonymous said...

உங்கள் கழகத்துக்கு நான் வெளியிலிருந்து ஆதரவு தருகிறேன்

6:16 PM  
Blogger துளசி கோபால் said...

//நியூஸியில் நடக்க இரக்கிற வலைப்பதிவர் மாநாட்டுக்கு எங்களுக்கு சரியான முறையில் அறிவிக்கவும் இல்ல. அனுமதி வாங்கவும் இல்ல. இதை சம்மந்தப்பட்டவர்கள் கவனிக்க வேணும்.//

எல்லாம் கவனிச்சாச்சு. சிறுபான்மையினருக்கு முன்னுரிமை என்ற வகையிலே எங்களுக்கு முன்னுரிமை தந்திருக்கவேணும் நீங்க.

அப்படிச் செய்யத்தவறியதாலெ நாங்க நியூஸி வலைப்பதிவர்கள் தனியாக நின்று மகாநாட்டை நடத்தப்போறோம். இதையே அழைப்பாப் பாவித்து நீங்களும் கலந்துக்கலாம்.

நீங்களாவே தென் துருவத்தைச் சேர்த்துக் கொண்டது அவ்வளவு நல்லா இல்லை. அப்புறம் நாங்க 'சதர்ன் ஹெமிஸ்பெயர்' போடவெண்டி இருக்கும், ஆமா.

ஆனா எல்லாத்தையும் பேசித் தீத்துக்கலாம். உடனடியா ஒரு கமிஷன் போடணும்.

எங்க பதவிகள் பறிபோகறதை நாங்க விரும்பேல்லை.

6:57 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

//சிட்னி மற்றும் நியுஸி பிரிவினர் என்ன செய்தாலும் அதற்கு மெல்பேண் தலைமைச் செயலகத்தில் அனுமதி பெற வேண்டும்.//

//சிறுபான்மையினருக்கு முன்னுரிமை என்ற வகையிலே எங்களுக்கு முன்னுரிமை தந்திருக்கவேணும் நீங்க//

அதுதானே.."தனிச்சிறுபான்மையா" நானொருத்தி இங்க சிட்னியில இருந்து எழுதிறன்(யார் வாசிக்கிறதெண்டெல்லாம் கேட்கக்கூடாது!), நீங்கள் உங்கண்ட பாட்டுக்கு தலைமைச் செயலகம் என்டெல்லாம் கதைச்சு முடிவெடுத்தும் முடிஞ்சு. பரவாயில்லை சின்னப் பெடியங்கள்தானே...ஏன் ஆசையக் கெடுக்க! என்ன சொல்றீங்க துளசி? :O)

செயலகங்களுக்குப் பொறுப்பானாக்கள் ஆரப்பு? தமிழில வலைப்பதியிற ஒஸ்ரேலியாக்காரர் கனபேர் இருக்குமாப் போல கிடக்கு! மாநாட்டுக்கு தனியஞ்சல் போட்டா கூப்பிடப்போறீங்க?

எனக்காவது தனியஞ்சலைப் போட்டாத்தான் சிட்னி மாநாடுக்குச் சனம். இல்லாட்டி மெல்பேணுக்குத் திரும்பிப் போன உடன "தலைமைச் செயலகத்தின் பிரதிநிதிகள் சிட்னியில் புறக்கணிப்பு" என்டு கண்டன அறிக்கை மாதிரி ஏதாவது விடுவீங்க! நீங்க வந்ததோ போனதோ இங்க ஒரு magpieக்கும் தெரிஞ்சிராது! :O)

7:32 PM  
Blogger சயந்தன் said...

அது தான் சொல்லியிருக்கம்ல! வசந்தன் வரபோறார். அவர் எப்ப வருவார் எப்பிடி வருவார் என்று யாருக்கும் தெரியாது. ஆனா... அடச்சீ நிறுத்தடா

7:49 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: வேலை வெட்டி அற்றவன்

சிட்னி மாநாடு எப்ப என்று சொன்னால் வந்து கரகோசம் செய்ய வசதியாயிருக்கும்.நன்றி


20.39 2.9.2005

3:45 AM  
Blogger வானம்பாடி said...

:)))))

6:23 AM  
Anonymous Anonymous said...

சென்னையிலேர்ந்து சிட்னிக்கு எந்த நம்பர் பஸ் போகும் எண்டு சொன்னால் வர வசதியாக இருக்கும்.

-கோயிஞ்சாமி 302

6:25 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Ivan thaan Avan

சிட்னியில உள்ளவங்களை பார்க்கிறதுக்கு பஸ் எடுக்கிறதும் கீழ்ப்பாக்கம் போக பஸ் எடுக்கிறதும் ஒண்ணு தான்.. சாமி!!!

0.54 3.9.2005

7:55 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: somee

undefined

23.38 2.9.2005

12:19 PM  
Anonymous Anonymous said...

POngkadaa.......
neengkalum ungkada vElaiyillaatha vengkaaya vilaiyaadum...
naddula saakira sanamO athukalOda nikkira vaiyalayo avayinta vEthaniyo theriyaama ankayingka poi 2,3 padaththa pidichuppOddu yaarukku pammaththuk kaadduriyal......intha velai miyakkadda velaiya vimarsikka oru kooddam vera...ENNDU YARUM UNGKALAI PIDIKKAATHAVI SOLLUVINAM....he..he..keep it up!
...........somee

1:09 PM  
Blogger சயந்தன் said...

//சிட்னியில உள்ளவங்களை பார்க்கிறதுக்கு பஸ் எடுக்கிறதும் கீழ்ப்பாக்கம் போக பஸ் எடுக்கிறதும் ஒண்ணு தான்.. சாமி!!!
//

இதுக்கு உடனடியாக நாங்கள் கண்டனம் தெரிவிக்க முடியாது. இந்த நபரின் கூற்றில் உண்மையிருக்கிறதா என்பதனை முதலில் ஆராயவேணும். எல்லாம் சிட்னி மாநாடு முடிந்த உடனை இதைப் பற்றி அறிவிக்கிறம்.

3:50 PM  
Blogger `மழை` ஷ்ரேயா(Shreya) said...

//இதுக்கு உடனடியாக நாங்கள் கண்டனம் தெரிவிக்க முடியாது//

(மிஸ்..இங்க பாருங்கொ என்டு ராகத்தோட பாடுவமே..அப்பிடி வாசிக்க வேணும்):

ஏனைய செயலகங்களே..இங்க பாருங்கோ!! இப்பிடிச் சொல்லுறாங்க!! :O)

4:19 PM  
Blogger கலை said...

கலக்குறீங்க. வாசித்து (விழுந்து விழுந்து) சிரித்தேன்.

12:09 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home