லக்ஸ்மன் கதிர்காம (ர் இல்லை)
போன சனிக்கு முதல் சனிக்கிழமை!
முதல்நாள் வரை பாயாசம் காய்ச்சுவதாக இருந்த எண்ணத்தை கதிர்காமரின் இறப்புச் செய்தி கேட்டு கைவிட்டு விட்டம். ஏற்கனவே பிளான் பண்ணியிருந்தது தான் என்றாலும், நாளைக்கு கதிர்காமரின் இறப்பை பாயாசம் காய்ச்சி கொண்டாடினாங்கள் எண்ட பழிச்சொல் வரக்கூடாது பாருங்கோ!
அண்டைக்கு காலமை போல என்னோடை படிக்கிற என்ரை சிங்கள நண்பன் msn இல் Nudge ஒண்டை அனுப்பினான். நான் அப்ப போனில இருந்தன். அவரின்ரை Nudge க்கு பதிலேதும் சொல்லேல்லை.
மச்சான் லக்ஸ்மன் கதிர்காம கொல்லப்பட்டு விட்டார் எண்டான்.
நான் வேணுமெண்டே ஆரெண்டு கேட்டன்.
லக்ஸ்மன் கதிர்காம எண்டு திரும்பவும் அவன் சொன்னான்.
நல்லா குறிச்சுக் கொள்ளுங்கோ! அவன் லக்ஸ்மன் கதிர்காமர் எண்டு சொல்லேல்லை. ர் ஐ விழுங்கிட்டு கதிர்காம எண்டுதான் சொன்னவன்.
நான் அதைத்திருத்தி கடைசி R எழுத்தை Capital எழுத்தில் போட்டு அனுப்பினன்.
அங்கையிருந்து சிரிப்பு குறியொண்டை அவன் அனுப்பினான். கூடவே கதிர்காமர் ஒரு நல்ல மனிசர் எண்ட குறிப்பு வேறு!
சிங்கள மக்கள் கதிர்காமரை எப்படித் தங்களில் ஒருவராக பாக்கிறார்கள் என்பதுக்கும் அவரில எவ்வளவு நேசம் வைத்திருந்தார்கள் எண்டதுக்கும் இது ஒரு உதாரணம் எண்ட கோணத்தில தான் இந்த சம்பவத்தை நான் பாக்கிறன்.
கதிர்மாரை ஆர் கொலை செய்தது?
இது புலிகளின் வேலை இல்லை எண்டு என்னாலை அடிச்சு சொல்ல முடியாது. புலிகளும் புலிகளை ஆதரிக்கும் மக்களும் அவரை ஒரு துரோகியென்ற கண்ணோட்டத்துடன் அல்லது குறித்த ஒரு காலத்தில் போராட்டத்திற்கான ஒரு தடையாக இருந்தவர் என்ற ரீதியில் தான் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால், கதிர்காமரை கொல்லுவதற்கு புலிகளுக்கு இருந்த காரணங்களைப்போலவே வேறு சில சக்திகளுக்கும் அவரைக் கொல்வதற்கு காரணங்கள் இருந்திருந்தன என்பதை பலரும் வசதியாக மறந்து போகினம்.
எனக்கென்னவோ இவ்வாறான ஒரு தாக்குதலை புலிகளால் மட்டும் தான் நடாத்த முடியும் எண்ட கோணத்திலதான் பலரும் புலிகளை நோக்கி கரம் நீட்டுகிறார்கள்.
முன்பு போலில்லாமல் புலிகளுக்கும் சர்வதேச நாடுகளுக்குமான நேரடித் தொடர்புகள் இருக்கின்ற ஒரு காலத்தில், அதைத் தொடர்ந்தும் பேண புலிகள் விரும்புகின்ற ஒரு சூழ்நிலையில் இப்பிடியான ஒரு காரியத்தை செய்ய புலிகள் முன்வருவினம் எண்டது சாத்தியம் இல்லாதது.
வேணுமெண்டால் புலிகள் சர்வதேச நாடுகளிடம் நம்பிக்கை இழந்து, நீங்கள் செய்யிறதை செய்யுங்கோ நாங்கள் எங்கடை வழியைப் பாக்கிறம் எண்டு முடிவெடுத்து, உலகம் என்ன சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்ல எண்ட ஒரு நிலையில் இப்படியான காரியங்களில ஈடுபட கூடும்.
நிறைய பேர், கதிர்காமரின் கொலையை அடுத்து புலிகள் அப்பிடியொரு முடிவினை எடுத்து விட்டினம் எண்டுதான் ஆருடம் சொல்லியிருந்தவை. அதாவது யுத்தம் ஒண்டை தொடங்குறதுக்கு தயாராய் விட்டதாகவும் அவ்வாறெனில் அதற்கு தடையாக இருக்க கூடிய கதிர்காமரை அவர்கள் கொலை செய்திருக்கலாம் எண்டும் அவை சொல்லியிருந்தவை.
ஆனால் நிலைமை அப்பிடி இல்லை. புலிகள் இப்பவும் வெளிநாடுகள் சொல்லுறதை கேட்கினம் எண்டதுக்குக்கும் வெளிநாடுகளோடை ஒரு சுமுக உறவை பேண விரும்புகினம் எண்டதுக்கும் நல்ல ஒரு உதாரணம் சொல்லலாம்.
அதாவது பேசுவதாயிருந்தால் இடைக்கால நிர்வாக சபை மட்டும் தான் பேசுவம். அதை விட்டால் எதனையும் பேசத் தயாரில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த புலிகள் கதிர்காமரின் கொலையை அடுத்து யுத்தநிறுத்த நடைமுறைகள் குறித்து நோர்வே அனுசரனையில் இலங்கை அரசோடு நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள இணங்கியிருக்கிறார்கள். பேச்சுக்கள் வரும் வாரங்களில் ஒஸ்லோ நகரில் நடக்க இருக்கிறது என்கிறார்கள்.
இது புலிகளாக எடுத்த முடிவில்லை. ஏதோ ஒரு அல்லது கூட்டு வெளிச்சக்தி அன்பாக அல்லது அழுத்தமாக புலிகளை இந்த முடிவுக்கு இணங்கச் செய்திருக்கிறது.
யுத்தத்தை ஆரம்பிக்க முடிவெடுத்து கதிர்காமரை புலிகள் கொலை செய்திருந்தால், யுத்தநிறுத்தத்தை செம்மையாக நடைமுறைப் படுத்துவது தொடர்பாக பேச்சுக்களில் கலந்து கொள்ள வேண்டிய தேவை என்ன? பேச்சுக்களுக்கு அழுத்தம் கொடுத்த வெளிநாட்டுச் சக்திகளுக்கு இணங்க வேண்டிய காரணம் என்ன?
ஏனெனில் புலிகள் உலக நாடுகளுடன் சுமுக உறவு பேண விரும்புகிறார்கள். தமிழீழ தேசிய விடுதலைப் போரின் இன்னொரு பரிணாமமாக உலக நாடுகளுடனான தொடர்பை, உறவை புலிகள் விரும்புகிறார்கள்.
வெளிநாடுகளின் அழுத்தம் என்ற யதார்த்தத்தை புரிந்து கொண்டிருக்கின்ற புலிகள் இவ்வாறான ஒரு கொலைக்குள் தெரிந்தும் காலை வைப்பார்களா?
சரி, அப்ப யார் செய்திருப்பினம்?
புலிகளை இவ்வாறான ஒரு அழுத்தத்திற்குள் தள்ளிவிட விரும்புகின்ற அல்லது இன்னும் நிறைய இலக்குகளில் இதனையும் ஒரு இலக்காக கொண்ட ஒரு சக்தியாக ஏன் இருக்க கூடாது?
அண்மையில் வசந்தனோடை கதைச்சு கொண்டிருக்கேக்கை ஒண்டு சொன்னன். இந்தக் கொலையை புலிகள் செய்யவில்லையாயின் எனக்கு இரட்டை சந்தோசம்.
ஒன்று புலிகள் செய்யாததற்கு!

9 Comments:
.எனக்கு இரட்டை சந்தோசம்??????????/
எழுதிக்கொள்வது: இதைப் போட்டாத்தான் தமிழ்மணத்தில வருமாம்)
உம்முடைய பங்குக்கும் துவங்கீட்டீரே!கதிர்காமர்....... கத்தரிக்காய்.....எண்டு.... பேசாமல் புத்தகத்தையெடுதுப் படிசிப்போட்ட பட்டத்தோட வாருமன்.... உமக்கு வசதியானவொரு... சங்கதிக்குள் அழைச்சுக்கொண்டு போறன்.அல்லது
2.46 24.8.2005
//உம்முடைய பங்குக்கும் துவங்கீட்டீரே!கதிர்காமர்....... கத்தரிக்காய்.....எண்டு//
:(
//புலிகளை இவ்வாறான ஒரு அழுத்தத்திற்குள் தள்ளிவிட விரும்புகின்ற அல்லது இன்னும் நிறைய இலக்குகளில் இதனையும் ஒரு இலக்காக கொண்ட ஒரு சக்தியாக ஏன் இருக்க கூடாது? //
Hey, you mean India..?? hhh
எழுதிக்கொள்வது: Aha
வந்துட்டார் பெரிய இவரு!
17.34 24.8.2005
புலிகள் தவிர்ந்த வேறு சக்திகளுக்கும் கதிர்காமரை கொல்ல காரணங்கள் இருந்திருக்கின்றன என்பதை புலிகள் மேல் குற்றம் சாட்டுகின்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எழுதிக்கொள்வது: chenthooran
ஆகா........! நீங்க சிரிய எவரோ?
12.13 26.8.2005
எழுதிக்கொள்வது: chenthooran
எழுதிக்கொள்வது: chenthooran
ஆகா........! நீங்க சிரிய எவரோ?
12.13 26.8.2005
12.15 26.8.2005
very nice sayanthan!... I like your writing style.. pls write more...... will be waiting for yourssss..... dont make me wait for too long....!!!!!!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home