14.2.05

இணைய வல்லுனர்களின் தார்மீக கடமை

ஹி ஹி ஹி அப்பிடியொண்டும் பெரிசா இல்லை இணைய வல்லனர்களே.. புது வீட்டுக்கு வந்தும் ஒழுங்காக கடிதங்கள் வந்து சேராது போல இருக்கிறது. இன்னமும் தீர்க்க வேண்டிய சில பிரச்சனைகள் கூடவே வந்து கொண்டிருக்கின்றன.

1) தமிழில் பின்னூட்டம்... பார்க்கும் பதிவில் எல்லாம் அவரவர் ஹாயாக தமிங்கிலிஷில் அடியுங்கள் தானாக தமிழாகும் பாமினியில் அடியுங்கள் தானாக யுனிகோட் ஆகும் என்றெல்லாம் போட்டிருக்கிறதை பார்க்க இந்தச் சின்னத்தம்பியின் மனது கனத்துப் போகிறது!!! கொசப்பேட்டை குப்பு விக்கி இப்பிடி எல்லா இடத்தில சொன்னது மாதிரியும் முயற்சித்து பின்னர் களைத்தும் ஆச்சு.. ஒண்டும் சரிவரேல்லை

2) சாரல் பதிவில் தனித்த பதிவுகளை சொடுக்கிப் பார்க்கின்ற போது உதாரணமாக ஒரு பதிவை நான் இட்டால் அதனை தமிழ்மணத்தினூடாக நீங்கள் அணுகினால் அங்கு கருத்து எழுதுவதற்கு எந்த வசதியையும் காணோம். முகப்பு பக்கத்தில் மட்டும் அந்த வசதி இருக்கிறது..
ஆகவே தான் நண்பர்களே எதை எதை வெட்டி எங்கு எங்கு ஒட்டுவதென்று சொன்னால் உங்களுக்கு ரொம்ப புண்ணியமாக போகும்.
ஹி ஹி ஹி நாளைக்கு உலக அளவில் பேசப்படப் போகின்ற ஒரு வலைப் பதிவுக்கு உதவி செய்வதன் மூலம் வரலாற்றில் உங்கள் பெயரையும்.............................. நிறுத்துடா சயந்தா

3 Comments:

Anonymous Anonymous said...

சாரல் நல்லாத்தான் அடிக்குது. உம்ம எண்ணெண்டு தொடர்பு கொள்ளுறது. தேடிப்பாத்தும் உம்மட மின்னஞ்சல் முகவரி எடுக்கேலாமக் கிடக்கு. பேசாம நேரில வந்து உதவலாம்போல கிடக்கு. பூராயம் எண்டு ஒண்டு திறந்திருக்கு பாத்தனீரே. அந்த வடிவம் பிடிச்சிருக்கே. நானும் இன்னும் முழுச்சிக்கலில இருந்தும் விடுபடேல. அதோட நானும் இதச் செய்யேல. என்ன நண்பன் கணேஸ் தான் எல்லாம். எதுக்கும் ஒருக்கா உம்மட அஞ்சல் முகவரியத் தாரும். (என்ர குருட்டுக்கண்ணுக்குத்தான் தெரியேலயோ)

6:24 AM  
Anonymous Anonymous said...

ஓமோம்.. பூராயம் அந்த மாதிரி இருக்கு.. அதுவும் பின்னூட்ட பெட்டி அசத்தல்.. ஏனெண்டால் எங்கட கன பேருக்கு பாமினியிலை எழுத்தடிச்சுத் தான் பழக்கம். நானும் அது தான்.. இப்பவும்.. இது தான் முகவரி ksajee@gmail.com முடிஞ்சால் ஒருக்கா உதவுங்கோ

6:39 AM  
Anonymous Anonymous said...

இப்ப எல்லாம் சரி தானே

12:44 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home