9.8.05

SuperCup க்கு தமிழ் என்ன இலங்கையில் 3A

மோட்டச்சைக்கிளில் (அதை மோட்டச்சைக்கிள் என்று சொல்லலாமோ தெரியாது. சோமிதரன் தான் கொண்டு வந்திருந்தான். TVS 50 ரகம் போல வேறொன்று. லைசென்ஸ் தேவையில்லையென்ற படியால் இறங்கி ஏறும் சோதனைச்சாவடிகளில் அந்த வண்டிதான் சரியான தெரிவு என அவன் சொன்னான்.)

நானும் சோமிதரனும் நாவற்குழி பாலத்தை தாண்டுகிறோம்.
பாலத்தில் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. சைக்கிள் மோட்டர்சைக்கிள் தவிர்ந்த வாகனங்களுக்கு அந்த வீதி மூடப்பட்டிருந்தது. அந்தப்பாலத்தினை என்னால் எண்டைக்கும் மறக்க முடியாது.

95 இன் இடம் பெயர்வில் பாலத்தில் ஏறுவது ஆபத்தென எண்ணி அருகே நீர் நிலைக்குள் நெஞ்சு முட்டும் தண்ணிக்குள்ளால் நடந்த ஞாபகங்கள் அந்தப் பாலத்தை கடக்கும் பொழுதுகளில் வரும்.

கைதடி தாண்டி, சாவகச்சேரி தாண்டி, கொடிகாமம் தாண்டி எழுது மட்டுவாள் வீதியில் ஏற இப்போது நான் ஓட்டத்துடங்கினேன்.

எழுதுமட்டுவாளிலிருந்து நாகர்கோயில் செல்லும் சாலையில் உள்ள ஒரு தென்னந்தோட்டத்தினில்த்தான் நாங்கள் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தோம். தற்போது அது உயர்பாதுகாப்பு வலயம்.

எழுதுமட்டுவாளின் வீதிகள் பரவாயில்லை ரகம். ஆனால் வீதிகளில் இராணுவ பிரசன்னம் இனியில்லையென்ற அளவு அதிகம். வீதிகளிலும், கடைகளிலும் (அவர்களின் சொந்தக் கடைகளும் இருக்கின்றன. உ+ம் அப்பக்கடை அல்லது புலனாய்வு மையம்) வாகனங்களிலும் திரியும் இராணுவத்தினரை பார்க்கையில் ஏதோ இராணுவ பிரதேசத்திற்குள் வந்து மக்கள் குடியேறி இருக்கின்றது போல இருந்தது.

வீதிகளில் ஒவ்வொரு இராணுவ ட்ரக் வரும் போதும் சோமிதரன் பின்னாலிருந்து குரல் கொடுப்பான். ' கவனமடா.. தட்டிப்போட்டு விபத்தெண்டுவாங்கள்.'

முகமாலை இராணுவ சோதனைச்சாவடி.

நான் மோட்டச்சைக்கிள் விபரங்களை இராணுவத்திற்கு குடுக்க வேணும். சோமிதரன் போய் தனது அடையாள அட்டை விபரங்களை பதிந்து விட்டு வரவேணும்.

மோட்டச்சைக்கிளை நிறுத்தி விட்டு நான் என்னைப்பதியிறவரிடம் போனன்.

'எந்த இடம் போறனீங்க'

'கிளிநொச்சி'

'ஐடென்ரிகாட்'

குடுத்தன். அதில் எனது முகவரி கொழும்பு என்று இருக்கக்கண்டவன் பிறகு சிங்களத்தில் கதைக்க தொடங்கினான். நான் திணறத்துடங்கினேன்.
மோட்டர்சைக்கிள் நம்பர் கேட்டான்.

'நாசம்கட்ட.. ஆருக்கு தெரியும் அது? நான் நினைவில்லையென்று சொன்னன். என்னை ஒரு மாதிரிப் பார்த்தான்.

ஒருவேளை மோட்டச்சைக்கிள் களவெடுத்துக்கொண்டு போறன் எண்டு பிடிக்கப்போறானோ என்று வேறு யோசிச்சன்.

'என்ரையில்லை எண்டு சொல்லிப்போட்டு வந்து போய்ப்பாத்துக்கொண்டு வர கேட்டன். ஓம் எண்டான். போய் நம்பர் பாத்திட்டு வர அதுக்கிடையில சோமிதரனும் வந்திட்டான்.

எல்லாம் முடிஞ்சு மோட்டச்சைக்கிளில் ஏறி வெளிக்கிட திடீரென்று ஒருத்தன் நிப்பாட்டி என்ரை பொக்கற்றை காட்டி என்ன எண்டு கேட்டான்.
ஜீன்ஸ் பொக்கற்றுக்குள்ளை துருத்திக்கொண்டு ஒரு பொருள் இருந்ததை அவன் கண்டு விட்டான். ஹி ஹி ஹி.. அது வேறையொண்டுமில்லை. அது.. ஒரு கொஞ்சம் பெரிசாப்போன சீப்பு.

எடுத்துக்காட்டினன். அவனுக்கு சிரிப்பு வந்தது.

'எங்கை போனாலும் உதுகளை விடமாட்டியளே..' என்று சோமிதரன் நக்கல் அடித்தான்.

ஒரு கொஞ்சத்தூரமான ஆமியுமில்லாத புலிகளுமில்லாத சூனிய பிரதேசத்தை தாண்டி இப்ப புலிகளின்ரை பகுதிக்குள்ளை நுழைகிறோம்.

'சரி சயந்தன். நீ உவங்களிட்டை போய் எல்லா பதிவுகளையும் முடிச்சுப்போட்டு வா. அதுக்கிடையில நானொருக்கா கிளிநொச்சி போட்டு வாறன்.' எண்டு சோமிதரன் சொல்லும் போதே விளங்கிட்டுது.

ஒரு விண்ணப்பம் வாங்கி அதை நிரப்ப வெளிக்கிட்டன். அதில மோட்டச்சைக்கிள் என்ன கலர் எண்டு கேட்டு இருந்தது. மோட்டச்சைக்கிளை பாத்தன். அதில பச்சை நீலம் கறுப்பு என எல்லா கலரும் இருந்தது. நான் எல்லா கலரையும் எழுதினன்.

முக்கியமா விண்ணப்ப படிவத்தை தமிழில நிரப்ப சொல்லி இருந்தது. எனக்கு பக்கத்தில நிண்டவர் என்னைப்பாத்து அண்ணை 'Super cup' இற்கு (ஒரு மோட்டச்சைக்கிள் வகை.) என்ன தமிழண்ணை எண்டு கேட்டார்.

'பேசாமல் 'சுப்பர் கப்' எண்டு போடுங்கோ எண்டு சொன்னன். 'இல்லயண்ணை உவங்களோடை சில்லெடுக்கேலாது. ' எண்டு சொல்ல சோமிதரன் முதல்த்தர கோப்பை எண்டு போடுங்கோ எண்டான்.

அவர் பேசாமல் போட்டார். என்னெண்டு போட்டார் எண்டு தெரியேல்லை.
எல்லாம் முடிய நாங்கள் ஒராளைப்போய் சந்திக்க வேணும். அவர் எங்களை ஒரு சின்ன இன்ரவியூ செய்வார். அதுக்கு பிறகு விசா?? தருவார்.

நானும் சோமியும் உள்ளை நுழையுறம். வணக்கம் இருங்கோ எண்டுறார்.
'கிளிநொச்சியில எந்த இடத்துக்கு போறியள்.'

NTT (தமிழீழ தேசிய தொலைக்காட்சி) என்று சோமிதரன் சொன்னான்.

'நீங்கள் செய்தியாளர்களோ' சோமியைப்பாத்து கேட்டார்.

'இல்ல. நான் NTT க்கு பயிற்சி வகுப்பு எடுக்கிறனான். இவர் என்னோடை வாறார். ' இன்னும் கொஞ்ச நேரம் கதைத்தபிறகு நாங்கள் புறப்பட்டோம்.

கொஞ்ச நேரத்தில் பளை கடந்து ஆனையிறவு பெருவெளி வந்தது.
--இன்னும் சொல்லுவன்--

5 Comments:

Blogger கயல்விழி said...

//'எங்கை போனாலும் உதுகளை விடமாட்டியளே..' என்று சோமிதரன் நக்கல் அடித்தான்.//

நல்ல பகிடி எப்படி விடுறது என்ன. பெண்கள் மட்டும் அலங்காரப்பை கொண்டு திரியினம் எண்டுவார்கள். இதை இனி நினைவில வைக்கவேணும்.


//வீதிகளில் ஒவ்வொரு இராணுவ ட்ரக் வரும் போதும் சோமிதரன் பின்னாலிருந்து குரல் கொடுப்பான். ' கவனமடா.. தட்டிப்போட்டு விபத்தெண்டுவாங்கள்.'//

இப்ப தான் திரத்திக்கொண்டே சனம் திருப்பிக்கொடுக்குதாமே.

8:24 AM  
Anonymous Anonymous said...

//பேசாமல் 'சுப்பர் கப்' எண்டு போடுங்கோ எண்டு சொன்னன். 'இல்லயண்ணை உவங்களோடை சில்லெடுக்கேலாது. ' எண்டு சொல்ல சோமிதரன் முதல்த்தர கோப்பை எண்டு போடுங்கோ எண்டான்.//

நல்லபகடிதான் சயந்தன்.மிகுதியையும் எதிர்பார்க்கிறேன்.படங்கள் யாழ்ப்பாணத்தில் எடுக்கவில்லையோ? நீண்டகாலத்தின் பின் படங்களையாவது
பார்க்கலாம் எண்டால் இப்படி ஏமாத்திறீங்கள்.சரி பதிவைத்தன்னும்
விரையாக போடுங்கள்.

10:15 AM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Kannan

//'இல்லயண்ணை உவங்களோடை சில்லெடுக்கேலாது. ' எண்டு சொல்ல சோமிதரன் முதல்த்தர கோப்பை எண்டு போடுங்கோ எண்டான்.//

என்ன நக்கலா?

11.3 10.8.2005

6:04 PM  
Anonymous Anonymous said...

Kermit The Frog turns 50
Wow, it seems like only yesterday that Kermit was...well, actually, to be honest, I never gave a second thought about what his age really was.
Providing Quality Sound in hip hop listen rap Entertainment!

2:50 PM  
Anonymous Anonymous said...

எழுதிக்கொள்வது: Find me

ஆஹா.. உங்களோட ப்ளாக்கில இனி A+ Gold Starன்னு போட்டுறவேண்டியது தான்! .வெள்ளைக்காரங்க எல்லாம் வந்து படிக்கிறாங்க போலிருக்கே!

11.19 12.8.2005

6:22 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home